பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 தமிழ் நூல் தொகுப்புக்கலை 3. பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - 100-5,6. திரு மழிசை ஆழ்வார் -(1) நான்முகன் திருவந்தாதி -96(2) திருச்சந்த விருத்தம் - 120 - 6,7, 5. நம்மாழ்வார்- (1)திரு விருத்தம் - 100; -(2)திருவாசிரியம் - 11. (3) பெரிய திருவந்தாதி - 87 (4) திருவாய்மொழி. 1102 – 8, * - மதுரகவியாழ்வார்-கண்ணி நுண் சிறுத்தாம்பு-11-7,8, குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி - 105 - 8. பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - 473 - 8. ஆண்டாள் - (1) திருப்பாவை-30; (2) நாச்சியார் திரு மொழி-143-8. 10. தொண்டர்டிப்பொடி யாழ்வார் -(1) திருமாலை - 45; (2) திருப்பள்ளி யெழுச்சி - 10-8. 11. திருப்பாணாழ்வார்-அமலனாதி பிரான்-10-8. 12. திருமங்கையாழ்வார்ட் (1) பெரிய திருமொழி-1084; (2) திருக்குறுந் தாண்டகம்-20;(3) திருநெடுந்தாண்டகம் -30; (4) திருவெழு கூற்றிருக்கை - 1; (5) சிறிய திரு மடல்-1 (6) பெரிய திருமடல்-1. صممي i இது, ஆழ்வார்கள் தோன்றிய கால வரிசை முறைப்படி யான தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் மொத்தம் 3776 பாக்களே உள்ளன. நாலாயிரம் பாக்கள் இல்லை. எனவே, இவற்றோடு, திருவரங்கத் தமுதனார் என்பவர் இராமாநுசர் மேல் இயற்றிய இராமநுச நூற்றந்தாதி என்னும் நூலின் 108 பாடல்களையும் சேர்த்துப் ப்திப்பித்துள்ளனர் இதையும் சேர்க்கின் (3776 - 108 = 3884) பாடல்களே தேறுகின்றன. மேலும் 116 பாடல்கள் குறைகின்றன. குறையை நிறைவு செய்ய, திருமங்கை யாழ்வார் இயற்றிய சிறிய திருமடல்’ என்னும் நீளக் கலிவெண்பாவை நாற்பது கண்ணிகளாகவும் 'பெரிய திருமடல்’ என்னும் மிகவும் நீளமான கலிவெண் பாவை எழுபத்தெட்டு கண்ணிகளாகவும் பிரித்துக் கணக்கிடு கின்றனர். தேசிகப் பிரபந்தம் என்னும் நூலிலும் இது சொல்லப்பட்டுள்ளது. f * 'சிறியமடல் பாட்டு முப்பத்தெட் டிரண்டும் சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத்தெட்டும்" (373)