பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 449 என்பது பாடல் பகுதி. வேறு சிலர், இராமாநுச நூற்றந் தாதியை நீக்கி, சிறிய திருமடலை 77ஆகவும் பெரிய திரு மடலை 148 ஆகவும் கொண்டு நாலாயிரத்தை நிரப்பிக் காட்டு கின்றனர். இந்தக் கால்த்தில், கம்பரின் சடகோபர் அந்தாதியைச் சேர்த்து நாலாயிரத்தை நிரப்ப முயல்பவரும் உளர். இவ்வாறு பாடல்களை நிரப்புவதிலே கருத்து வேற்றுமை உள்ளதுபோலவே, நூல்களின் வரிசையமைப்பிலும் கருத்து வேறுபாடு உண்டு. நாதமுனி என்னும் வைணவப் பெரியார் நம்மாழ்வாரிட மிருந்து இந்த ஒலைச் சுவடிகளையெல்லாம் பெற்று நாலாயிரப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்று சொல்லப்படுகிறது. முத லில் நாலாயிரப் பிரபந்தம் என்று பெயர் வழங்கப்பட்டதாக வும், பின்னர், தெய்வத் தொடர்பு கருதித் திவ்விய்" என்பது சேர்க்கப்பட்டு ‘நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்' என்று பெயர் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிலர், நாலாயிரம் என் னும் எண்ணைக் குறிப்பிடாமல் 'திவ்வியப் பிரபந்தம்' எனச் சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. இன்னும் கேட்டால், 'பிர பந்தம் என்ற ஒரு சொல்லாலேயே குழுஉக் குறியாக நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைக் குறிப்பிடுபவரும் உளர். வேறு தொகுப்பு முறை: கால வரிசை முறைப்படி தொகுக்காமல், பாக்களின் பொருளமைப்பு கருதியும் வேறு மரபு கருதியும் பின்வருமாறு நாதமுனியால் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அம் முறை வருமாறு: 1. பெரியாழ்வார் திருமொழி, 2. திருப்பாவை, 3. நாச்சி யார் திருமொழி, 4. பெருமாள் திருமொழி, 5. திருச்சந்த விருத்தம், 6. திருமாலை, 7. திருப்பள்ளியெழுச்சி, 8. அமல னாதி பிரான், 9. கண்ணி நுண்சிறுத்தாம்பு, 10. பெரிய திரு மொழி, 11. திருக்குறுந்தாண்டகம், 12. திரு நெடுந்தாண்டகம், 13. முதல் திருவந்தாதி, 14. இரண்டாம் திருவந்தாதி, 15. மூன்றாம் திருவந்தாதி, 16. நான்முகன் திருவந்தாதி,