பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 451 முதல் ஐய வினா: இங்கே இரண்டு ஐய வினாக்கட்கு இடம் உண்டு. ஒன்று:ஆழ்வார்கள் திருமாலின்மேல் பாடிய பாக்களுடன், திருவரங்கத் தமுதனார் எதிராசர்மேல் பாடிய பாக்களைச் சேர்க்கலாமா என்பது முதல்வினா. இதற்கு உரிய விடையாவது: மதுரகவியாழ்வார் பாடிய கண்ணிநுண்சிறுத் தாம்பு' என்பது, பதினொரு பாடல்கள் கொண்ட ஒரு பதிகம். மதுர கவிபாடியது இவ்வளவே. கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்பது, முதல்பாட்டில் உள்ள முதல் தொடராகும். முதல் பாடலின் முதல் குறிப்பே பதிகத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிகம், மதுரகவி நம்மாழ்வார் மேல் பாடிய பதிக மாகும். எனவே, நம்மாழ்வார்மேல் மதுரகவி பாடிய பாடல் கள் சேர்க்கப்பட்டிருக்கும் போது, இராமாநுசர்மேல் திரு வரங்கத்தமுதனார் பாடிய பாடல்களை அதாவது இராமாநுச நூற்றந்தாதியைச் சேர்க்கலாம் அல்லவா? இதன் அடிப்படை யிலேயே, இக்காலத்தார் சிலர், நம்மாழ்வார் மீது கம்ப ரால் பாடப் பெற்ற சடகோபர் அந்தாதியைத் திவ்வியப் பிர பந்தத்தோடு சேர்க்கின்றனர் போலும்! சடகோபர் என்பது நம்மாழ்வாரின் மற்றொரு பெயராகும். திருமாலின் தொண்டர் களைப் பற்றிய பாடல்களும் திவ்வியம் உடையனவே என்பது இன்னோரின் கருத்தாயிருக்கலாம். சைவப் பாடல் ஒற்றுமை: சைவத் திரு முறைகள் பன்னிரண்டனுள் சுந்தரர் தேவா ரம் ஏழாம்திருமுறையாக அமைக்கப் பெற்றுள்ளது; இது நூறு பதிகங்கள் கொண்டது. இந்த நூறில் 39 ஆம் பதிகம் 'திருத் தொண்டத் தொகை எனப்படும். தில்லை வாழ் அந் தணர்' என்று தொடங்கும் இந்தப் பதிகத்தின் பதினொரு பாடல்களிலும், சிவனுடைய தொண்டர்களைக் குறிப்பிட்டு, அவர்கட் கெல்லாம் யான் அடியேன் என்று பாடியுள்ளார். இவ்வாறு சிவனைப் பாடியதோடு சிவனடியார்களைப் பற்றிப் பாடிய பாடல்களையும் சுந்தரர் தேவாரத்தில் சேர்த்துக் கொண்டிருப்பது போல், திருமாலின் தொண்டர்கள் மீது பாடிய