பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 தமிழ்நூல் தொகுப்புக்கலை பாடல்களையும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் சேர்த்துக் கொள்வதில் குறையொன்றும் இலது. இரண்டாம் ஜயவினா: இனி இரண்டாவது ஐய வினா வருமாறு: - தேசிகப் பிர பந்தம் 383 ஆம் பாடவில் - 'ஐயனருட் கலியன் எதிராசர் தம்மோடு ஆறிருவர் ஓரொருவர் அவர்தாம் செய்த துய்யதமிழ் இருபத்து நான்கிற் பாட்டின் தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே' என, நாலாயிரம் பாடல்களும் ஆறிருவரும் (பன்னிருவரும்) ஒரொருவரும் (ஒருவர்-எதிராசர்) செய்தன எனக் கூறப்பட் டிருக்கிறதே - ஆனால், எதிராசர் செய்த நூல் ஒன்றும் நாலா யிரத்தில் குறிப்பிடப்பட வில்லையே-அவர்மேல் அமுதனார் பாடிய நூல்தானே நாலாயிரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது-இது பொருந்துமா? - என்பது இரண்டாவது ஐய வினா. ஒரு வகையில் இது பொருந்தாதுதான். இராமானுசர் (எதிராசர்) செய்த தமிழ்நூல் ஏதாவது ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவர் வடமொழியிலேயே பல நூல்கள் எழுதியுள் ளார்; தமிழில் எழுதவில்லையாம். ஒருவேளை அவர் எழுதிய தமிழ்நூல்கள் சில கிடைக்காமலும் இருக்கலாம். எனவே, எதிராசரே செய்த தமிழ் நூல் ஏதாவது ஒன்றைச் சேர்ப்ப தாயிருந்தாலே இது பொருந்தும். இல்லையேல், தேசிகப் பிர பந்தத்தில் கருத்து அறிவித்துள்ள முறை தவறானதா யிருக்க வேண்டும். இந்தச் செய்தியை அவ்வளவு எளிதாக விட்டு விடுவதற்கு இல்லை. ஏனெனில், மணவாளமாமுனிகள் இயற்றிய உபதேச ரத்தின மாலை என்னும் நூலிலும் ஆழ்வார்கள் பன்னிருவ ரோடு எதிராசரும் கூறப்பட்டுள்ளார்: 'பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ்மழிசை ஐயன், அருள் மாறன், சேரலர்கோன்-துய்யபட்ட நாதன், அன்பர்தாள் துளி நற்பாணன், நன்கலியன், ஈதிவர் தோற்றத் தடைவாம் ஈங்கு”