பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/477

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 455 மங்கை யாழ்வாரையும் இரண்டாம் பாட்டில் அமைத்திருக் கலாமன்றோ? ஆதலின் அன்னார் கூற்று பொருந்தாது. அவ் வளவு ஏன்? மனம் வைத்தால் - சிறிது முயன்றால் பன்னிரு வரையும் ஒரே வெண்பாவில் அடக்கமுடியும்: “பொய்கை, பூதன், பேயார், பொன்மழிசைக் கோன், - மாறன, செய்ய மதுரகவி, வையகமெண் பட்டர் பிரான், கோதை, தொண்ட ரடிப்பொடி,பாணன், கட்டவிழ்தார் வாட்கலியன் காப்பு” (நூற்.திருப்-1) (மாறன்=நம்மாழ்வார். சேரர் பிரான் = குலசேகர ஆழ்வார். பட்டர்பிரான்=பெரியாழ்வார். கோதை=ஆண்டாள். கலியன் =திருமங்கை யாழ்வார்). இந்த ஒரே வெண்பாவில், ஆழ்வார்கள் பன்னிருவரும் அடக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதுரகவியையும் ஆண்டாளையும் விலக்கிப் பதின்மர் என்று சிலர் கூறுவதற்குக் காரணம் யாதாயிருக்கலாம்? மதுரகவி, கண்ணி நுண் சிறு தாம்பு’ என்று தொடங்கும் பாடல் முதலாகப் பதினொரு பாடல்களே ப்ாடியுள்ளார். அப் பாடல்கள் அனைத்தும் திருமாலைப் பற்றியவல்ல; நம்மாழ் வார்மேல் பாடப்பட்டனவாகும். அதனால் மதுரகவியை விலக்கியிருக்கலாம். பெண்பாலார் என்பதால் ஆண்டாளை விலக்கியிருக்கலாமோ என்னவோ! மதுரகவியும் திருப்பாணாழ்வாரும் ஒவ்வொரு பதிகமே (11,10) பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முறையே பதினொன்றும் பத்துந்தானா பாடியிருப்பார்கள்? இன்னும் மிகுதியாகவும் பாடியிருக்கலாம். அவை கிடைக் காமல் போயிருக்கலாமன்றோ? கிடைத்தவரைக்கும் தொகுக் கப்பட்டதே திவ்வியப் பிரபந்தம். வேதமும் நாலாயிரமும் சமசுகிருத வேதங்களை ஆழ்வார்கள் தமிழில் பாடினார் கள் என்பதாகப் பல நூல்களில் - பல பாடல்களில் ஒரு கருத்து