பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/478

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


456 தமிழ்நூல் தொகுப்புக் கலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேண்டாத கருத்து. வட மொழிக்கு இணையானது என்னும் பெருமை பெற இதனைத் தமிழ் வேதம் என்றும் கூறுகின்றனர். இது தாழ்வு மனப்பான் மையை-தாழ்வுச் சிக்கலைக் (Inferiority Complex) காட்டுகின் றது. வடமொழி வேதம் அதன் போக்கில் இருந்து போகட் டும்-நாலாயிரம் இதன் போக்கில் இருந்து போகட்டும். இரண் டிற்கும் தேவையின்றி முடிச்சு போடுவது ஏன்? வேதத்தைத் தான் தமிழில் சொன்னார்கள் என்று யாரேனும் சொன்னால் சொல்விப் போகட்டும். இதற்கு மறுப்பு கூற வேண்டுமெனி னும் கூற முடியும். o நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆயிரம் பாடல்களும் ஆயிரம் வேதம் எனப்படுகிறது. இது பெருமையே யாகும். ஆனால், சமதகிருத வேதத்தைப் படித்துத்தான் தமிழில் எழு தப்பட்டது என்று கூறின் அது பொருந்தாது. நம்மாழ்வார் வேளாளர்-திருப்பாணாழ்வார் பாணர்-திருமங்கை யாழ்வார் முக்குலத்தார் (கள்ளர்). இவர்கள், வருணாசிரம முறைப்படி சூத்திரர்கள் ஆவர். சூத்திரன் காதில் சமசுகிருத மறை மொழி கேட்குமாயின், அவன் காதில் நாராசத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது மனுதரும சாத்திரத்தில் கூறப்பட் டுள்ள ஒரு செய்தியாகும். எனவே, இவர்கள் எவ்வாறு பண் டைக் காலத்தில் வேதம் படித்திருக்க முடியும்?-எவ்வாறு வேதத்தைத் தமிழில் கொண்டுவந்திருக்க முடியும் ? மேலும் ஒரு கொடுமைச் செய்தி உள்ளது. அரிதாசர் என் பவர், தமது இருசமய விளக்கம் என்னும் நூலில், வேதம் கற்றவர்களாலேயே ஆழ்வார்களின் பாடல்கட்குப் பொருள் விளங்கிக் கொள்ள முடியும் என்னும் கருத்தில், 'பூதனே முதலோர் ஆழ்வார் புகன்றவை சில உண்டு அந்நூல் வேதநூல் உணர்ந்தோர்க் கன்றி விரித்திடும் பொருள் விளங்கா" என்று பாடியுள்ளார். என்ன கொடுமை இது. என் நண்பரும் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவரும் ஆகிய ஒரு பெரியார்