பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/479

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 457 (பெயர் குறிப்பிடுவதற்கில்லை), நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு விளக்க உரை எழுதினார். அதைக் கண்ட வைணவ அந்தணர் (ஐயங்கார்) ஒருவர், வைணவ அந்தணர்களே திரு வாய் மொழிக்கு விளக்கம் எழுத வேண்டும் எனக் கூறினாராம். இதற்கு என் நட்புப் பெரியார் கூறிய பதிலாவது: - நம்மாழ் வாரும் வெள்ளாழன்.நானும் வெள்ளாழன்; நம்மாழ்வார் என் மாமன்-மச்சான்; எனவே, நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு நான் விளக்கம் எழுதாமல் வேறு யார்மட்டும் எழுதவேண்டுமாம்?- என்று பதில் இறுத்தாராம். இது, அந்த நண்பரே என்னிடம் நேரில் கூறிய செய்தி. இதற்கு எதிர்மாறாக, புரிந்து கொள்ள முடியாத வேதக் கருத்துகளை ஆழ்வார்களின் பாடல்களைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வர் என்னும் கருத்துடைய 'செய்தமிழ் மாலைகள் நாம் தெளிய ஒதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின் றோமே" - என்னும் தேசிகப் பிரபந்தப் பாடல் பகுதி ஈண்டு கருதத் தக்கது. மற்றும், இதற்கு ஒரு படிமேலாக, கம்பர் தமது சடகோபர் அந்தாதி என்னும் நூலில் நம்மாழ்வாரின் தமிழ்ப் பாடல்கள் செய்யும் அற்புதங்களை வேதம் செய்ய முடியாது என்னும் கருத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்: "சாதிக்குமே பரதத்துவத்தைச் சமயத் திருக்கைச் சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப் போதிக்குமே எங்குமோங்கிப் பொது கிற்கு மெய்யைப் பொய்யைச் சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே’ (18) என்பது பாடல். எனவே, எந்த மொழி நூலையும்-இதனினும் இது உயர்ந்தது - இதனினும் இது தாழ்ந்தது என்று கூறல் வேண்டா. திருவாய் மொழியின் இடம்: நாலாயிரத் தொகுப்பில் திருவாய் மொழியின் இடம் எது