பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 தமிழ்நூல் தொகுப்புக் கலை திருவாய் மொழி எத்தனையாவது ஆயிரம்?-என்று கூறுவது மிகவும் சிக்கலானது. நாலாயிரத்தில், 1102 பாடல்கள் கொண்ட நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஓராயிரமாகவும், திருமங்கை யாழ்வாரின் 1084 பாடல்கள் கொண்ட பெரிய திருமொழியை மற்றோர் ஆயிரமாகவும் சிறிது ஏறத்தாழக் கூறுவது மரபு. முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திரு வாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்-ஆகிய பத்து நூல்களையும் 'இயற்பா என்னும் தொகைப் பெயரில் அடக்கி, இயற்பா ஒராயிரம் என்றும் கூறுவது மரபு. இம் மூன்று ஆயிரங்களும் போக, மீதியுள்ள பதினொரு நூற் பாடல்களை 'முதல் ஆயிரம் எனல் மரபு. இந்த நான்கு ஆயிரங்களுள், முதல் ஆயிரம் முதலாவது ஆயிரமாகவும், பெரிய திருமொழி இரண்டாவது ஆயிரமாக வும், திருவாய்மொழி மூன்றாவது ஆயிரமாகவும், இயற்பா நான்காவது ஆயிரமாகவும், முதல் முதல் 1856 ஆம் ஆண்டு வெளியான கூர்மாசாரியர் பதிப்பிலும், 1856 ஆம் ஆண்டு வெளியான காரப்பங்காடு கோபாலாசாரியார் பதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ளன. 1959 ஆம் ஆண்டில் வெளியான பி. இரத்தினநாயகர் சன்ஸ் பதிப்பில், இயற்பா மூன்றாவது ஆயிரமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல பதிப்புகள்: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு மேற்கூறிய பதிப்பு களேயன்றி, மற்றும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன. 1865 ஆம் ஆண்டு, அப்பாவு முதலியார் பதிப்பு-1905 ஆம் ஆண்டில் அரசாணி பாலை கிருஷ்ணமாசாரியார் பதிப்பு-பாபநாசம் சி. கல்யாணசுந்தர முதலியார் பதிப்பு, உரையுடன், விக்ருதி, வைகாசி, 17, அமிழ்த மனை வெளியீடு, சென்னை கிருஷ்ணா பிரின்டிங்வொர்க்ஸ் - 1956 ஆம் ஆண்டு, எஸ். ராஜம் பதிப்பு1967 ஆம் ஆண்டு, பி.ப. அண்ணங்கராசாரியார் பதிப்பு:1973,