பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 459 1981, வி. பூதூர் கி. வேங்கடசாமி ரெட்டியார் பதிப்புமுதலிய பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. சில 9646ಗಿಸrmârâ என்னும் எண்ணிக்கையை நிரப்ப, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன பல பாக்கள் போல் கண்டபடி பிரிக்கப்பட்டுள்ளன. நூறு என்பதைக் குறிப் பிடப் பட்டிக்காட்டார் ஒருவர், "முப்பரு முப்பரா முணு முப்பரு-அம்பறம் ஒரு ஒம்பரு - அம்பறம் ஒரு ஒத்தை' என்றா ராம். இதன் பொருள்: முப்பது முப்பதாக மூன்று முப்பதாம் (30x3=90). அப்புறம் ஓர் ஒன்பதாம் (90-9=99). அப்புறம் ஒர் ஒற்றையாம் (99+1=100). இப்படியாக ஏதோ கணக்கிட்டு இடர்ப்படுகின்றனர். சில பாடல்கள் ஏறினால் என்ன-குறைந் தால் என்ன? முழுமைப்படுத்திக் (Round பண்ணிக்) கொள்ள வேண்டியது தானே. - - பத்துகள் அமைப்பு: இனி, நாலாயிரப் பிரபந்தத்தில் பின்பற்றியுள்ள பத்து களின் அமைப்பு பற்றிக் காண்பாம்: ஆழ்வார்களின் நூல்களுள், இயற்பா’ என்னும் தொகுப் பில் அடக்கப்பட்டுள்ள பத்து நூல்கள். தவிர், மற்ற பதின் மூன்று நூல்களும் பல பத்துகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு 'பத்து என்பது, பத்துப் பாடல்கள் கொண்டதாகும். சில பத்துகளில் பதினொரு பாடல்களும் இருக்கும். சைவத் தேவாரங்கள் பல பத்துகளாக உள்ளமை போன்றே-அவற்றுள் சில பத்துகளில் பதினொரு பாடல்கள் உள்ளமை போன்றே இங்கும் உள்ளன. திவ்வியப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பத்துக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பத்துக்குப் பெயர் வைக்கும் முறை கழக (சங்க) இலக்கியங்களிலேயே உள்ளது. ஐந்து திணைகளைப் பற்றிய ஐங்குறு நூறு என்னும் நூல் பப்பத்துப் பாடல்கள் கொண்ட ஐம்பது பத்துகளை உடையதாகும். அவ்வத் திணைக்கு உரிய பறவை-விலங்கு முதலிய கருப்பொருள்களா லும், இன்னார்க்கு இன்னார் சொன்னது என்னும் துறைப் பெயர்களாலும், பாடல்களில் உள்ள சிறப்புச் சொல் - சிறப்புச்