பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/482

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


460 தமிழ்நூல் தொகுப்புக் கலை சொற்றொடர்களாலும், இன்ன பிறவற்றாலும், ஐங்குறு நூற்றுப் பத்துகளுக்குப் பெயர்கள் வைக்கப்பெற்றுள்ளன. கழக இலக்கியங்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து என்னும் நூலின் பெயரைக் கொண்மூட, அது பத்துப் பத்துகளை உடையது என அறியலாம். இந்த நூலில் ஒரு பத்துக்குப் பொதுப் பெயர் இல்லாமல், ஒவ்வொரு பாட்டுக்கும் அதில் வந்துள்ள ஒரு சிறப்புத் தொடரால் பெயர் கொடுக்கப்பட் டுள்ளது. இவை யெல்லாம், இந்நூலின் முதல் பாகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சைவ நூல்களாகிய தேவாரத்திலும் திருவாசகத்திலும் பத்துகள் உண்டு. தேவாரப் பத்துகள் (பதிகங்கள்) ஊர்ப் பெயரால் வழங்கப்படுகின்றன. திருவாசகப் பத்துகள், பாடலின் இறுதிச் சொல்லால் பெயர் பெற்றுள்ளன. திவ்வியப் பிரபந்தத்தின் பத்துகளோ, ஒவ்வொரு பத்தின் முதல் பாட்டிலுள்ள முதல் தொடரால் பெயர் வழங்கப்பட் டுள்ளன. எடுத்துக்காட்டுகள் வருமாறு: பெரியாழ்வார் திருமொழி என்னும் நூலின் முதல் பத்தின் முதல் பாட்டு 'பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கு கிறது. எனவே, அந்தப் பத்துக்குத் திருப்பல்லாண்டு' என்னும் பெயர் தரப்பெற்றுள்ளது. இரண்டாம் பத்தின் முதல்பாடல் "வண்ண மாடங்கள்' என்று தொடங்குகிறது. எனவே, இப்பத்துக்கு வண்ண மாடங் கள்' என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே மற்ற பத்துகளும் முதல் பாடலின் முதல் குறிப்பால் பெயர் பெற் றுள்ளன. * திருப்பாணாழ்வார் ஒரு பத்தே பாடியுள்ளார். அதன் முதல் பாடல் அமலனாதி பிரான்' எனத் தொடங்குகிறது. எனவே, அப்பத்து அமலனாதி பிரான் எனப் பெயர் வழங் கப்பெற்று, ஒரு நூலாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறே, மதுரகவி யாழ்வாரும் ஒரு பத்தே பாடியுள் ளார். (பத்து எனினும் இதில் பதினொரு பாடல்கள் உள்ளன.) இதன் முதல் பாடல் கண்ணி நுண் சிறுத் தாம்பு எனத்