பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/483

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 461 தொடங்குகிறது. எனவே, இந்தப் பத்து, 'கண்ணி நுண் சிறுத் தாம்பு’ என்னும் பெயர் வழங்கப் பெற்று, ஒரு நூலாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் குறிப்பால் பெயர் பெற்ற வேறு சில நூல்களும் உண்டு. திருவாசகத்தின் மூன்றாம் பகுதி அண்டப் பகுதி என்று தொடங்குகிறது.அந்தப் பகுதிக்குத் திருவண்டப் பகுதி என்னும் பெயர் தரப்பெற்றுள்ளது. ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் - என்னும் நூல்கள், நூலின் தொடக்கத்தில் உள்ள காப்புச் செய்யுளின் முதல் தொடரால் பெயர் பெற்றவையாகும். பெரியாழ்வார் திருமொழி என்னும் நூலில் முதல் பத்தா கிய திருப்பல்லாண்டை ஒரு தனிநூலாகக் கணக்கிட்டு, இரண் டாம் பத்தாகிய வண்ண மாடங்கள்’ என்பதை அந்த நூலின் முதல் பத்தாகக் கொள்பவரும் உளர். பலர் பல காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பாகிய திவ்வியப் பிரபந்தம் இவ் வாறு எடுப்பார் கைப்பிள்ளையாகப் பலராலும் பல விதமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? திருக்குறளை எடுத்துக்கொள்வோமே. ஒவ்வொரு தலைப்பிலும் (அதிகாரத் திலும்) உள்ள பத்துக் குறள்களைப் பழைய உரையாசிரியர்கள் பல விதமாக வரிசைப் படுத்தியுள்ளன ரல்லவா? அதே போல் திவ்வியப் பிரபந்தத்தின் நிலையும் உள்ளது. பத்துகளுக்குப் பெயர் வைத்திருப்பதும் பண்ணும் தாள மும் குறிப்பிட்டிருப்பதும் ஆழ்வார்களின் செயலன்று. பின் வந்தவர்களின் கைவண்ணமே இவை. இதில் தொகுப்பாசிரியர் நாதமுனிக்கும் பங்கு இருக்கும். சிறப்புப் பெருமை: சிவன் கோயில்களில் தேவாரத் திருமுறைகட்குப் போதிய பெருமை அளிக்கப்படவில்லை. ஆனால், திருமால் (பெருமாள்) கோயில்களில் திவ்வியப் பிரபந்தத்திற்குச் சிறப்பான பெருமை அளிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் திரு மங்கை யாழ்வாரின் திரு நெடுந்தாண்டகமும், ஆண்டாளின் திருப்பாவையும் வைணவர்களால் பெரிதும் போற்றப்படு கின்றன.