பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/484

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


462 தமிழ்நூல் தொகுப்புக் கலை ஆண்டாள் தம்மை நாயகியாகவும் கண்ணபிரானை நாயக னாகவும் கொண்டு பாடியுள்ளார். பெரியாழ்வார் தம்மை யசோதையாகக் கொண்டு பாடியுள்ளார். நம்மாழ்வாரின் திருவிருத்தம் முழுதும் அகப்பொருளமைந்தது. திருமங்கை யாழ்வாரும் அகப்பொருள் அமைத்துப் பாடியுள்ளார். உரைகள்: திவ்வியப் பிரபந்தத்திற்குப் பலர் உரை யெழுதியுள்ளனர். பெரிய வாச்சான் பிள்ளை என்பார் முழுவதுக்கும் உரை யெழுதியுள்ளார். திருவாய் மொழிக்கு, ஆறாயிரப்படி-ஒன்பதா யிரப்படி - பன்னிராயிரப்படி-இருபத்து நாலாயிரப்படி - ஈடு முப்பத்தாறாயிரப்படி-எனப் பல. உரைகள் உள்ளன. ஆனால் இவ்வுரைகள் சமசுகிருதமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள(இரு மொழி) நடையில் உள்ளன. தமிழில் சமசுகிருதம் கலந்துள்ளது என்று கூறுவதைவிட, சமசுகிருதத்தில் தமிழ் கலந்துள்ளது என்று கூறலாம் போல் தோன்றுகிறது. உரைகள் என்னவோ மிகவும் சிறப்பானவையே. ஒரு வகைத் திறனாய்வு என்றே கூறலாம். ஆனால், உரையாசிரியர்கள் அவர்களுக்காக எழுதி யுள்ளதாகத் தோன்றுகிறதே தவிர, பொதுமக்கள் படித்துப் புரிந்து கொண்டு பயனடையும்படியாக இல்லை. இந்த உரை களை, தமிழ் மொழிப் பாடல்கட்குச் செய்யப்பட்ட ஒரு சார் மொழி பெயர்ப்பு என்று கூறலாம் போல் தோன்றுகிறது. தெளிவாகப் புரியும் தமிழ்ப் பாடல்களுக்குப் புரியாத நடையில் உரை தேவைதானா என்று கேட்டு வேதனைப் படு பவர் உளர். உரையாசிரியர்கள் அவர்கள் அறிந்த உரைநடை யில் எழுதியுள்ளனர். தனித்தமிழ் இயக்கத்தினரே சில நேரங் களில் பிற மொழி கலந்து பேசிவிடுகின்றனர். இந்த உரை யாசிரியர்கள் தமிழும் வடமொழியும் கலந்தே பேசிப் பழக்கப் பட்டவர்கள். தாங்கள் பேசுவது போலவே எழுதிவிட்டனர். 'திருத்தமான எழுத்து நடை என்பது, ஒழுங்குபடுத்தப் பட்ட பேச்சு நடையின் விளைவே'.என்று கிரீனிங் (Greening) என்ற அறிஞர் கூறியுள்ளார். செந்தமிழும் நாப் பழக்கம் என் பது ஒளவையின் தனிப் பாடல் பகுதி. நல்ல தமிழ் நடையில் பேசிப் பழகியிருந்தால் அல்லவா - நல்ல தமிழ் நடையில் எழுத