பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் - 463 முடியும்? இவர்களைப் போன்றோர் ஹரி கதா காலகேடியம்' என்னும் பெயரில் சொற்பொழிவாற்றும் போது, இந்த வேத னையான நிலையைக் காணலாம். எனவே, இவ்வுரையாசிரியர் களின் நடையைப் பொருட்படுத்தாமல், அரிதின் முயன்று கருத்தைமட்டும் எடுத்துக் கொண்டு சுவைக்க வேண்டும். காலம்: திவ்வியப் பிரபந்த ஆழ்வார்கள் கி.பி.ஐந்தாம் நூற்றாண் டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் உள்ள கால கட்டத்தில் தோன்றியுள்ளனர். எனவே, பாடல்களின் காலமும் அன்னதே, நான்கு நூற்றாண்டு காலத்தில் எழுதப்பெற்ற பாடல்களை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகத் தொகுத்த நாதமுனி ஒன்பதாம் நூற்றாண்டினர்; எனவே, இந்நூல். தொகுக்கப் பெற்ற காலமும் அன்னதே. பல காலங்களில் பலர் பாடிய பாடல்களின் - நூல்களின் தொகுப்பு ஆதலின், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் 'பன்மலர் மாலைத்திரள் என்னும் வகைக்குள் அடக்கலாம். தமிழ் மாலைகள் இந்தக் கட்டுரை நூலில், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் திற்குத் 'தமிழ் மாலைகள்' என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. இப்பெயர் தேசிகப் பிரபந்தம் என்னும் நூலிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டதாகும். இப்பெயர் திவ்வியப்பிரபந்தத்திற்குப் பொருந்து மாற்றை, ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து தரப்படும் சில அகச் சான்றுகளால் நிறுவலாம். ஆழ்வார்களுள் பலர் தம் பத்தின் இறுதியில் தம் பெயரைக் குறிப்பிட்டு, இன்னார் பாடிய தமிழ்’-இன்னார் பாடிய ‘மாலை' என்றெல்லாம் கூறியுள்ளனர். இவர்களையும் முத்தி ரைக் கவிஞர்கள்’ எனலாம். இனி அகச்சான்றுகள் வருமாறு:பெரியாழ்வார் இயற்றிய பெரியாழ்வார் திருமொழி' என்பதிலிருந்து: 'வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லார்க்கு இடர் இல்லிையே" - (1-5-10)