பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 தமிழ்நூல் தொகுப்புக் கலை "பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலை (1-6-11) "ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லார்" (1-10-10) "சீர்மலி செந்தமிழ் வல்லார்' (2-4-10) "ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லார்' (2-6-10) "ஏரார் இன்னிசை மாலை" (3-1-10) ஆண்டாளின் திருப்பாவைலிருந்து: 'கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும்' (30) ஆண்டாளின் நாச்சியார் திருமொழியிலிருந்து: "கோதை விருப்புடைய இன்தமிழ் மாலை” (1-10) 'கோதை வாய்த் தமிழ் வல்லார்” (2.10) குணசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி' என்பதிலிருந்து'குலசேகரன் சொற்செய்த நடை விளங்கு தமிழ் மாலை” - (1-11) "குலசேகரன் சொல்லினின் தமிழ்மாலை' (2-10) திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து: 'கலியன் ஒலி செய் தமிழ்மாலை' (1-5-10) 'வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்” (1-8-10) அவரது திருக் குறுந் தாண்டகத்திலிருந்து: 'கலியன் சொன்ன வண்தமிழ் மாலை' (20) அவரது திரு நெடுந்தாண்டகத்திலிருந்து: 'மன்னிய நூல் தமிழ் மாலை வல்லார்” (30) நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலிருந்து

  • சடகோபன் பண்ணிய தமிழ்மாலை' (2-7-10) “பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து' (2-8-11)

இவ்வாறு இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டலாம். ஆழ்வார்கள் இசையோடு பாடியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அகச் சான்றுகளால், இந்தத் தொகை நூலுக்குத் "தமிழ் மாலைகள்' என்னும் பெயரிட்டிருப்பது பொருந்து மன்றோ?