பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 465 சிறு சிறு தொகுப்புகள் பெரிய திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முழுவதும் இன்றி, சிற்சில பகுதிகள் மட்டும் சிறு சிறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள் ளன. சில வருமாறு: திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி என்னும் நூலில் 11 பத்துகள் (11 பெரும் பகுதிகள்) உள்ளன. இவை - வியாக்கியான-விரிவுரையுடன் பதிக்கப்பெற்றுள்ளது. இந்தப் பதினொரு பத்துகளும் நான்கு சம்புடங்களாக (உட்பகுதி களாக) அச்சிடப்பட்டுள்ளன. முதல் பத்தும் இரண்டாம் பத்தும் முதல் சம்புடம்; 3,4,5 ஆம் பத்துகள் இரண்டாம் சம்புடம்; 6,7,8 ஆம் பத்துகள் மூன்றாம் சம்புடம்; 9,10,11 ஆம் பத்துகள் நான்காம் சம்புடம். இதற்கு உரை எழுதியவர், பெருமாள் கோயில் பிரதி வாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய சுவாமிகள். இவர் உரைக்குத் திவ்யார்த்த தீபிகை என்பது பெயர். உரையுடன் வெளியிட்டவர், சென்னை, எம்.ஆர். கோவிந்தசாமி நாயுடு. அச்சகம் சென்னை மாடல் அச்சுக் கூடம். முதல் சம்புடம் 1927(பிரபவ) ஆம் ஆண்டிலும், இரண் டாவது சம்புடம் 1929 (விபவ) ஆம் ஆண்டிலும், மூன்றாம் சம்புடம் 1930 (சுக்ல) ஆம் ஆண்டிலும், நான்காம் சம்புடம் 1930 (பிமோதுரித) ஆம் ஆண்டிலும் (கார்த்திகைத் திங்கள்) பகுதி பகுதியாக-சிறுசிறு தொகுப்பாக வெளியிடப் பெற்றன. மற்றும், பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான - விரிவுரையுடனும் அப்பு என்பவரின் அரும்பத உரையுடனும்: பெரிய திருமொழியின் 1,2,3, ஆம் பத்துகள் 1908 ஆம் ஆண்டி லும், 4,5,6,7, ஆம் பத்துகள் 1909 ஆம் ஆண்டிலும், 8,9,10, 11 ஆம் பத்துகள் 1910 ஆம் ஆண்டிலும், காஞ்சி-சீதா சார்ய அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியாயின. அச்சிட்டவர் : பூரீ வைஷ்ணவ க்ரந்த முத்ராபக சபையார்.