பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 தமிழ்நூல் தொகுப்புக் கலை திருவேங்கடப் பதிகங்கள்: திருவேங்கடத் திருப்பதியைப் பற்றி, பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ் வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.ஆகிய பதின்மரும் பாடிய 195 பாடல்கள் உரையுடன் தனித் தொகுப்பார் அச்சிடப்பட்டுள்ளன. இதன் உரையாசிரியர்: தி.கு.வேம்.ந. சுதர்சனா சார்ய சுவாமிகள். சார்பு: திருமலை-திருப்பதி தேவத்தான அற நிலையக் கழகம். ஒப்புதல்: செயல் துறைத் தலைவர் செ. அண்ணாராவ், பி.ஏ. அச்சகம்: திருமலை-திருப்பதி தேவத் தான அச்சகம், வெளியான ஆண்டு: 1953. நூற்றெட்டுத் திருப்பதிப் போற்றி அகவல் திருப்பத்தூர் கா.அ.சண்முக முதலியார் என்பவர் ஆழ்வார் களின் மங்களாசாகனம் (பாடல்) பெற்ற நூற்றெட்டுத் திருப்பதிகளின் பெயர்களையும் அடக்கி 108 அடிகள் கொண்ட ஒர் அகவல் பா இயற்றி முன்னால் சேர்த்துள்ளார். அதனை அடுத்து, நூற்றெட்டுத் திருப்பதிகளின்மேல் ஆழ்வார்கள் அருளியுள்ள சிற்சில பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிகளைப் பற்றிச் செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதப் பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. திருப்பதி களைப் பற்றிய விளக்கமும் தரப்பெற்றுள்ளது. பதிப்பு: திருப்பத்துரர் கா.அ. சண்முக முதலியார், குடியேற்றம் - அமிர்தா அச்சகம், சென்னை-1963. o இவ்வாறாக, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தொடர்பர்ன சிற்சில சிறுசிறு தொகுப்புகள் உள்ளன.