பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகுப்பைக் குறிக்கும் பெயர்கள்: அறிஞர் பெருமக்கள் பல பாடல்களை ஒன்று திரட்டித் தொகுத்து உருவாக்கித் தந்துள்ள நூல்கள் தொகை நூல்கள்’ என்று பெயர் வழங்கப் பெறுகின்றன. தொகுக்கப் பெற்றது தொகை. தொகைக்கு எப்போதுமே மதிப்பு உண்டல்லவா? தொகையை விரும்பாதவர் உளரோ? எவரும் தொகை சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை யன்றோ? காசு பணத்தின் தொகுப்பாகிய தொகையைத்தான் இங்கே குறிப் பிட்டுப் பேசுகிறேன். இந்த எடுத்துக் காட்டால், தொகை" என்னும் பெயரின் பொருள்செறிந்த சிறப்பு விளங்கும். ஆனால் காசு பணமாகிய தொகையை விட, பாடல் தொகை-நூல் தொகை பெரிதும் உயர்வாகப் போற்றப்படுவது யாவரும் அறிந்த உண்மை. நம் முன்னோர்கள் பல்வேறு பாடல்களின் தொகுப்பு நூல்களைத் தொகை என்னும் பெயரால் வழங்கியிருக் கின்றனர். எடுத்துக் காட்டாக, குறுந்தொகை, கலித் தொகை, நெடுந்தொகை என்னும் சங்க நூல்களின் பெயர்களைக் காண்க. சங்க காலப் பாடல்களின் தொகுப்புக்கள் தொகை" என்னும் பெயரால் வழங்கப்பட்டன. அவற்றை யடுத்து நாள டைவில் தொகுக்கப்பட்டு வந்த நூல்கள் தொகை என்னும் பெயரேயன்றி, இன்னும் பல்வேறு பெயர்களாலும் சுட்டப் பட்டன. அப்பெயர்களாவன: - தொகுதி, தொடை, கொத்து கோவை, கோர்வை, மாலை, மாலிகை, மஞ்சரி, புஞ்சம், கடிகை, திரட்டு, தேவாரம், திருமுறை, நிகண்டு, சிந்தாமணி சமுத்திரம், பிரபந்தம், கலம்பகம், கதம்பம், முதலியனவாம். இவற்றுள் வடமொழிப் பெயர்களும் சில உள. இப்பெயர்கள், பல்வேறு தொகை நூல்களைக் குறிக்கும் பெயர்களின் இறுதிப் பகுதியாக இருந்து வருகின்றன. இப்பெயர்களைத் தாங்கிய தொகை நூல்களை-நூற்றுக் கணக்கில் அன்று. ஆயிரக் கண்க் கில், அடுத்த அடுத்த பகுதிகளில் அறிந்து மகிழலாம். Joséâto 3 (Anthology) - தொகுப்பு நூலைக் குறிக்கத் தமிழில் ஏறக்குறைய இருபது பெயர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத்தொகுப்பு