பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டைக்காலம் 469 இ புறத்தில் நீதி அடங்கும்; ஆனால், நீதியில் புறம்-கைக்கிளைபெருந்திணை ஆகியவை அடங்காவாதலின் புறத்திரட்டு என்னும் பெயரே பொருந்தும் என்று கூறப்படுகிறது. பல புறத்திரட்டுப் படிகளுள் காமத்துப்பால் இல்லை. புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் தொகுப்புப் படிகளுள் காமத்துப் பால் இருக்கிறது. விரிவுத் தொகுப்பில், பொருட் பால் வாழ்த்து என்னும் தலைப்புடன் முடிவதால், அந்த மட்டில் நூல் முடிந்து விட்டதாகக் கருதி, பின் உள்ள காமத்துப் பாலை விலக்கி விட்டிருக்கலாமோ என்று சிலர் கருதுகின்றனர். பாடல்கள் வெண்பா - விருத்தம் - அகவல் என்ற முறையில் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. புறத் திரட்டுச் சுருக்கம் புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் தொகுப்புப் படி உள்ளது. விரிவில் இல்லாத காமத்துப் பால் இதில் உண்டு. காமத்துப் பாலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் முத்தொள்ளாயிரம் என்னும் நூலின் பாடல்களாகும். * தொல்காப்பியம்-செய்யுளியலில் உள்ள அங்கதப்பாட்டு என்று தொடங்கும் (118ஆம்) நூற்பாவின் உரையில் பேராசிரி யர், "கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுள்” என்று ஒதப் பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துப் போல பல வாயினும்." என்று கூறியிருப்பதைக் கொண்டும், காமத்துப் பால் செய்யுள்கள் முத்தொள்ளாயிரத்துச் செய்யுள்கள் என் பதை அறியலாம். இப் பாடல்கள் புறத் திரட்டோடு இணைக் கப்பட்டன. இத் தொகுப்பில் உள்ள பால்களும் தலைப்பு களும் பற்றிய விவரம் வருமாறு: 1. அறத்துப் பால்:-(1)கடவுள் வாழ்த்து முதல் (40) செல்வ நிலையாமை ஈறாக 40 தலைப்புகள் 2. பொருட்பால்:-(41) இறைமாட்சி முதல் (135) வாழ்த்து ஈறாக 95 தலைப்புகள் 3. காமத்துப்பால்:- (136) கைக்கிளை, (137) தகை யணங் குறுத்தல் முதல் (161)ஊடலுவகை ஈறாக 26 தலைப்புகள்