பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/492

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


470 தமிழ்நூல் தொகுப்புக் கலை இத் தொகுப்பில், திருமலைக் கொழுந்து வெண்பா' என்னும் நூலிலிருந்து 27 பாடல்கள் தரப்பட்டுள்ளன. இன்னா நாற்பது ஒரு பாடலும், இராம காதை இரண்டு பாடல்களும் சாமிநாத ஐயர் கடிதப் படியில் கூடுதலாக உள்ளன. இத் தொகுப்பின் ஏட்டுப் படிகளில், செல்வ நிலையாமை' என்னும் தலைப்பிற்குப் பின், சில வெள்ளேடுகள் (எழுதாத ஏடுகள்) உள்ளன. துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்னும் அதிகாரப் பகுதிகள் இருக்கலாம் என வையாபுரிப் பிள்ளை கூறியுள்ளார். பாடல் இறுதியில் நூல் பெயர் தந்திருப்பது பயனளிக்கிறது. புறத்திரட்டுச் சுருக்கப் படி யொன்று தமிழக அரசின் சுவடி நூல் நிலையத்தில் உள்ளது. இதில், அறத்துப் பாலில் 195 செய்யுட்களும் பொருட்பாலில் 418 செய்யுட்களும் உள் ளன. மொத்தம் 613 பாடல்கள் உள. - மற்றொரு புறத்திரட்டுச் சுருக்கப் படியில், மேலே குறிப் பிட்டுள்ள சுருக்கப் படியில் உள்ளவற்றோடு திருக்குறள்கள் சிலவும் திருமலை வெண்பாச் செய்யுட்களும் உள. ஓர் ஏட்டுச் சுவடியில் இறுதியில், “அறத்துப் பால், ப்ொருட்பால்,காமத்துப் பால் வகை (3)க்கு வெண்பா-விருத் தம்-பஃறொடை யாசிரியம் அகவற்பா எருயங் (753) புறத் திரட்டுச் சுருக்கம் முற்றும் உ.சிவ கடாட்சம் உண்டாகுக. உகசயஅu ரீமுகu சித்திரை மீ (சித்திரை மாதம்)உக உ (21 ஆம் தேதி) திருநெல்வேலியில் எழுதி முடித்தது. உஎன்று காணப்படுகிறது. இது திருநெல்வேலிப் படி (பிரதி). இத் தொகுப்பில் உள்ள திருமலை வெண்பா, 'திருமலைக் கொழுந்துப் பிள்ளை' என்பவர் மீது பாடப்பட்டது. இவர் திருநெல்வேலிச் சீமையை 1663 முதல் 1682 ஆம் ஆண்டு வரை மேலாட்சி செய்தவர்; வடமலை வெண்பா என்னும் நூலின் பாட்டுடைத் தலைவனாகிய காவை வடமலையப்பப் பிள்ளை என்பவரின் மகன் இவர்.