பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/493

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 471 மேற்குறித்த சுவடிப் படிகளின் மேலே பிரசங்காபரணம்' என்னும் தலைப்பு உள்ளது. இது, இக்காலத்தார் எழுதிய தலைப்புப் பெயராகும். பிரசங்கத்திற்கு ஆபரணம் போல் உதவுவது என்னும் பெர்ருளில் இப்பெயர் எழுதப்பட் டிருக்கலாம். சிலர், இப் பெயரையே தொகுப்பின் பெயராகக் கொண்டு மயங்குகின்றனர். பெயர்ப் பொருத்தம் புறத்திரட்டு விரிவுப் படிகள் பெரும்பாலானவற்றில் காமத்துப் பால் இல்லை. இது பொருத்தமான அமைப்பே யாகும். புறத்திரட்டு என்பது, அகமாகிய காதல் அல்லாத புறப் பொருள் பற்றிய தொகுப்பு ஆதலின், காமத்துப் பால் இல்லாமையே முறையாகும். புறத்திரட்டுச் சுருக்கத்தில் காமத்துப் பாலைச்சேர்த்தது பொருந்தாது. ஒரு வேள்ை, கைக் கிளையை அகமாகக் கொள்ளாமல் அகப்புறமாகக் கொண் டிருக்கலாம். அகப்பொருள் கருத்தாயிருப்பினும், பாண்டியன், சேரன், சோழன் போன்ற அடையாளப் பெயர் குறிப்பிட்டிருப் பின், அத்தகைய பாடல்கள் புறப்பொருளாகவே கருதப்படும். “மக்கள் நுதலிய அகன் ஐந்திணையில் சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்" என்பது தொல்காப்பியம் (அகத்திணையியல்-57). எனவே, இப்படி ஏதாவது காரணங்கள் கொண்டு காமத் துப் பாலைப் புறத்திரட்டுச் சுருக்கத்தில் சேர்த்திருக்கலாம். தொகுப்பின் காலம் புறத்திரட்டு விரிவு, சுருக்கம் என்னும் இரண்டிலுமே தொகுக்கப்பட்ட காலம் தெரிவிக்கப் படவில்லை. 17 ஆம் நூற்றாண்டினரான திருமலைக் கொழுந்துப் பிள்ளையின் மீது பாடப்பட்ட திருமலை வெண்பாப் பாடல் கள் சுருக்கத்தில் இருப்பதால், சுருக்கம் தொகுக்கப்பட்ட காலம் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி என்று சொல்ல வேண் டும். சில படிகளில் இந்நூல் பாடல்கள் இல்லையாதலின், முதலில் தொகுக்கப்பட்ட சுருக்கத்தின் காலம் இன்னும் முற் பட்டதாக இருக்க வேண்டும்.