பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/495

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 473 சிற்சில பாடல்களையாவது படிக்கட்டும் என்று தொகுத்துள் ளார். அவர் பெரும் புகழுக்கு உரியவர். இது முதல் பயனாகும். இரண்டாவது பயன்: இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில நூல்கள் தனியே எங்கும் கிடைத்தில. அவை: ஆசிரிய மாலை, இரும்பல் காஞ்சி, தகடூர் யாத்திரை, பெரும் பொருள் விளக்கம், குண்டல கேசி, வளையாபதி, முத்தொள்ளா யிரம் ஆகியவையாகும். இவற்றுள் சில நூல்களின் பெயர்கள் உரையாசிரியர்களின் உரைகளில் குறிப்பிடப்பட்டிருப்பினும், புறத்திரட்டில் குறிப் பிடப்பட்டிருப்பது அவற்றின் உறுதிப்பாட்டை அறிவிக்கிறது. இது மிகப் பெரிய பயன் அல்லவா? - அடுத்த பயன்: கிடைக்காத சில நூல்களின் பெயர்களை அறிவிப்பதல்லாமல், கிடைத்திருக்கும் சில நூல்களில் இல்லா மல் மறைந்து போயிருக்கும் சில பாடல்களை இந்தத் திரட் டால் அறிந்து கொள்ள முடிகிறது. பதிற்றுப் பத்து என்னும் நூல் சங்க இலக்கியமாகும். இது (10x10-100) நூறு பாடல் களைக் கொண்ட நூல். இதில், முதல் பத்துப்பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. இவற்றுள் இரண்டு பாடல்கள், பதிற்றுப் பத்து என்னும் நூல் பெயரிட்டுப் புறத்திரட்டில் தரப்பட்டுள்ளன. புறத்திரட்டில் 1260,1275 என்னும் எண்ணுடைய பாடல்களே அவை, அடுத்தது; எழுபது பரிபாடல்’ என்னும் நூலும் சங்க இலக்கியமாகும். ஆனால், எழுபது பாடல்களுள் இருபத் திரண்டு பாடல்களே இப்போது கிடைத்து அச்சிடப்பட்டுள்ளன. புறத்திரட்டுத் தொகுப்பிலிருந்து ஆறு பரிபாடல் பாடல்களின் பகுதிகள் அறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடல் பகுதியின் இறுதியிலும் பரிபாடல் என்னும் நூற்பெயர் தரப்பட்டுள்ளது. புறத்திரட்டில், 866, 874, 875, 876, 877, 878 என்னும் எண்கள் கொண்ட பாடல்களே இவை. புறத் திரட்டு இல்லையேல் இவை அறியப்பட மாட்டா. மேற்கூறியவற்றைக் கொண்டு மற்றொரு செய்தியும் அறிய வரும். அதாவது:- தமிழில் இன்னும் எத்தனையோ நூல்கள்