பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/496

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


474 தமிழ்நூல் தொகுப்புக் கலை இருந்து அழிந்து போய் விட்டிருக்கின்றன-மறைந்து விட்டிருக் கின்றன. புறத்திரட்டால் மறைந்து போன சில நூல்களை யாவது அறிய முடிகிறது என்னும் இரங்கத்தக்கசெய்தியாகும் அது. இவ்வளவு பயனுள்ள புறத் திரட்டைத் தொகுத்தவரின் பெயர் தெரியாதது மேலும் வருந்தத் தக்கதாகும். அகத்தியர் நூல்கள் அகத்தியர் பெயரால் பல தொகுப்புகள் உள்ளன. அகத் தியர் யார் -எந்த அகத்தியர்? - என்ற ஆய்வு தேவையில்லை. நூல்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். அகத்தியர் பன்னிராயிரக் காண்டம் - பல சிறு சிறு நூல்களின் தொகுப்பு இது. பத்து விரல் கிடை உயரமுள்ள பெரிய நூல். தனித்தனி நூலும் தனித் தனிப் பக்கமாகத் தொடங்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நூலும் ஒன்றிலிருந்து தொடங்கும் தனித் தனிப் பாடல் எண்ணிக்கை கொண்டுள்ளது. மருத்துவத் த்ொடர்பான நூல் அகத்தியர் பரிபூரணம் நானூறு - பல வகை மருத்துவம் தொடர்பான-மருந்துகள் தொடர் பான 400 பாடல்கள் கொண்டது. பார்வை: மயிலம் சுப்பிர மணிய சுவாமி. பத்ம நாப விலாச அச்சுக் கூடம், சென்னை —1912 அகத்திய சுவாமி காவிய நிகண்டு மருத்துவம் தொடர்பான எட்டுக் காண்டங்களின் தொகுப்பு. உயர்ந்த நடைப்பாடல்கள். அச்சாகவில்லை. அகத்தீசர் வாகட்ம் வாகடம் என்றால் மருத்துவ துல். பல பிணிகள் பற்றிய 1145 பாடல்களின் தொகுப்பு. நூல் முழுதும் இல்லை. அகத்தியர் மெய்ஞ்ஞானம் ஆயிரம் (R.152) பிள்ளையார், முருகன், சிவன் முதலியோரை வழி படும் முறை, யோகத்தின் பிரிவுகள், பஞ்சாக்கரம் முதலியவற் றின் பெருமைகள்-முதலியன பற்றிய ஆயிரம் பாடல்களின்