பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகைகள் தரும் கோடி இன்பம் டாக்டர் ச. மெய்யப்பன் இணைப்பேராசிரியர் தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உலக மொழிகளில் பழங்காலத் தொட்டு, தனிப்பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு காலத் தொகுப்பும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது. அறிவார்ந்த மனிதன் பொருளை, செல்வத்தை, மாடு மனைகளைத் தொகுத்துக் காலந்தோறும் மகிழ்வுறுகிறான். சிதறிக்கிடப்பதைத் தொகுப் பதும் அதனால் சிந்தை மகிழ்வதும் மாந்தன் இயல்பு. முன்னோர் செல்வமெல்லாம் தொகுத்துத் தன் புகழாக்கிக் கொள்கிறான். தொகுப்பாளனின் புலமைக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்பத் தொகுப்புக்கள் பன்முக நலன்களைப் பெற்றுச் சிறந்து விளங்குகின்றன. தொகுப்புக்களால் மொழி வளம் பெறுகிறது. தொகைகளால் ஏற்றம் பெறுகிறது. பாடல்கள் சிந்தாமல் சிதறாமல் வாழ்வு பெறுகின்றன. உதிரிப்பூக்கள் மாலையாகத் தொகுக்கப் பெறும்போது தனிமதிப்புப் பெறுகின்றன. தொகுத்தோர் கைவண்ணத்தால் தொகுப்பு மங்காப் புகழ் பெறுகிறது; ஒளி வீசுகிறது. பத்தாக, நூறாக, ஆயிரமாகப் பதிகம், சதகம், அந்தாதி என்ற அமைப்பில் தொகுப்புக்கள் அழகிய இலக்கிய வடிவம் பெறுகின்றன. அளவு பொருள் பயன் இவற்றை அடிப்படையாகக் கொண்டு காலந்தோறும் நூல்கள் தொகுக்கப் பெறுகின்றன. பத்துப்பாட்டு எட்டுத் தொகை பதினெண் கீழ்க்கணக்கு