பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/502

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


480 தமிழ் நூல் தொகுப்புக் கலை "திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்பது பாடல் பகுதி. திருப்புகழின் முதல் பாடல் 'கைத் தல நிறைகனி' என்று தொடங்கும் பாடலாகும்; இறுதிப் பாடல் "நிருதரார்க் கொரு” என்று தொடங்கும் பாடலாகும். பெருமாள்: அருணகிரிநாதர் முதல் ஐந்து பாடல்களால் பிள்ளை யாரைப் (விநாயகரைப்) பற்றிக் காப்புச் செய்யுளாகப் பாடி யுள்ளார். முருகனைப் பற்றிய திருப்புகழ்ப் பாடல்களின் இறுதி யில் பெருமாளே என்று விளித்து முடித்துள்ளார் ஆசிரியர். அவ்வாறே பிள்ளையாரையும் பெருமாளே என்னும் பெய ராலேயே விளித்துப் பாடலை முடித்துள்ளார். à 'அக்குற மகளுடன் அச்சிறு முருகன்ை அக்கண மண மருள் பெருமாளே” (1) “ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே” (2) 'வித்தக மருப்புடைய பெருமாளே” (3) என்னும் பாடல் ஈற்றடிகளில் பிள்ளையாரையும் பெருமாளே” என விளித்திருப்பதை அறியலாம். திருமாலைப் பெருமாள் என்பது பெரும்பாலான மரபு. அருணகிரியார் பிள்ளையாரையும் முருகனையும் பெருமாள் என் னும் பெயரால் குறிப்பிட்டிருப்பதால், பெருமாள் என்பது, தெய்வத்தைக் குறிக்கும் பொதுப் பெயர் எனக் கருதவேண்டி யுள்ளது. திருப்புகழ் நூலில் அளவு மீறி வடசொற்கள் கலந்திருப் பது காலத்தின் கோலம் என விட்டொழிக்க வேண்டும். பெண் களை மிகவும் இழிவு படுத்தியுள்ளார் அருணகிரியார் என்னும் குற்றச் சாட்டுக்குப் பதில், தொடக்கத்தில் வேசியரால் மிகவும் கெட்டழிந்த தம் சொந்தப் பட்டறிவால் அவர் நொந்து அவ் வாறு பாடிவிட்டிருக்கிறார்-என்பதே. சமயக் காழ்ப்பு இன்மை முருகனைத் திருமாலின் மருகனாக அருணகிரிநாதர்