பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/505

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 483 என்பது பாடல் பகுதி. திருப்புகழின் மிக்க இனிமைச்சுவை இப்பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகை நூலின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும். திருப்புகழோடு பிற தொகுப்புகள் படை வீட்டுத் திருப்புகழ், அருணகிரிநாதர், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், திருத்தணிகை, சோலை மலை, மதுரை, விராலிமலை, வயலூர், திருவானைக்கா, திருச்சிராப்பள்ளி - ஆகிய ஊர்கள் மேல் பாடிய திருப்புகழ்ப் பாடல்களுடன், ஆண்டவன் பிச்சை என்பவர் இவ்வூர்கள் மேல் பாடிய பதிகங் களும், ஆறு படை வீட்டுக் கீர்த்தனைப் பாடல்களும் தொகுக் கப்பட்டு "அருணகிரிநாதர் அருளிய படைவீட்டுத் திருப்புகழ் &ஆண்டவன் பிச்சைஇயற்றிய பதிகம் - பாட்டு" என்ற பெயரு டன் ஒரு தொகுப்பு, சென்னை 5 - பி.டி. வாணி கம்பெனி யாரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு தெரியவில்லை. அருணகிரிநாதர் திருப்புகழ்-பொதுப் பாடல்களும் மற்றைய நூல்களும் இந்தத் தொகுப்பில், 1304 திருப்புகழ்ப் பாக்களும், அருண கிரியார் அருளிய திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங் காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திரு வெழு கூற்றிருக்கை ஆகியவையும் அடங்கியுள்ளன. இத் தொகுப்பு, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சேலம் சரவணப்பிள்ளை - சிவசிதம்பர முதலியார் பரி சோதித்து, வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப் பிள்ளை பதித்தார் -சென்னை - கார்டியன் அச்சுக்கூடம்- அட்சய, கார்த்திகை - நவம்பர் 1926 - என்று உள்ளது. திருப்புகழ்ப் பொதுப் பாடல் கள் மட்டும் இரண்டாம் பதிப்பு பெற்றுள்ளதாம். மற்றவை முதல் பதிப்போடு சரி - வெளியான காலம்: முதல்பாகம்-துன் மதி வைகாசி - ஜூன். இரண்டாம் பாகம்-மாசி-1923-மார்ச்சு. மூன்றாம் பாகம் - 1924 - ஜூன் - முதல்பதிப்பு - என்றுள்ளது . முகவுரை அளித்தவர்கள்: வ.சு.செங்கல்வ ராயர்-31-10-1926; வ.சு. சண்முகம்-4-11-1926 - என்றுள்ளது.