பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/507

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 485 முதலிய பெயர்களுடன் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் சில காண்பாம்: - தோத்திரத் திரட்டு-முதல்பாகம் வெளியீடு-நல்லூர் ஆறுமுக நாவலர். வர்த்தமான தரங் கணி அச்சுக் கூடம், சென்னை. 1870. விநாயகர் முதலிய கட வுள் வணக்கப் பாக்களின் தொகுப்பு. சித்தி விநாயகர் தோத்திரத் திரட்டு ஆசிரியர்: சிவசம்புப் புலவர். மிமோரியல் அச்சுக் கூட்ம், சென்னை-1975. யாழ்ப்பாணம்-பருத்தித் துறை சித்தி விநாய கர் மீது இயற்றப் பெற்ற ஊஞ்சல், எச்சரிக்கை, பராக்கு, மங் களம் ஆகிய நான்கு சிறு நூல்களின் திரட்டு. தோத்திரப் LIITUD ITSð6) ஆசிரியர்: செங்கமல சுவாமிகள். கலாரத்நாகர அச்சுக் கூடம். 1879. சற்குருநாதன் வாழ்த்து முதலிய பல பகுதிகள் உள்ளன. தெய்வப் பாடல்கள் மிகுதி. ஈற்றில், 101 பாடல்கள் கொண்ட இரத்தினகிரி மாலை' என்னும் நூல் உள்ளது. பழகி யாண்டவர் தோத்திரப் பாமாலை ஆசிரியர்: கா. துரைசாமிக் கவிராயர். கலாரத்ந அச்சுக் கூடம், 1877. பழநியாண்டவர் மீது, வெண்பா, ஆசிரிய விருத் தம், கலி விருத்தம், கலித்துறை, தாலாட்டு, அடைக்கலம் -முதலியனவாகப் பாடப் பெற்ற பாடல்களின் தொகுப்பு. சடாரண்யத் தோத்திரப் பாமாலை ஆசிரியர் : சி. சோமசுந்தரக் கவிஞர்-வெளியீடு.தி.க. சுப்பு ராயச் செட்டியார். சிவாநந்த நிலைய அச்சுக் கூடம், சென்னை 1881. ஆர்க்காட்டில் எழுந்தருளியுள்ள, விநாயகர் பதிகங் கள், விநாயகர் பஞ்ச ரத்தினம், முருகர் பஞ்ச ரத்தினம், நடராசர்-தட்சணாமூர்த்தி தோத்திரங்கள். சுந்தர சுவாமிகள் தோத்திர மாலை ஆசிரியர்: செ. தணிகைராயக் கவிஞர். கலாரத்நாகர அச்சுக் கூடம், சென்னை-1881. சுந்தர சுவாமிகளைத் துதிக்கும் பாடல்கள், பதிற்றுப்பத்தந்தாதி, சில தோத்திர நூல்கள்.