பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/509

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் - 487 தோத்திரத் திரட்டு ஆ.பொற் களந்தை வீர ராகவ முதலியார். சுஜநரஞ்சநி முத்திரா சாலை, சென்னை. 1884. உ-கச்சிப் பெருந்தேவியார் பதிகம், வரத ராசப் பெருமாள் பஞ்சரத்தினம், திருவேங் கடத்தான் பதிகம், திருவேங்கடத்தான் பஞ்ச ர்த்தினம் முதலிய நூல்கள் உள்ளன. கதிர்காம நாதர் திருவருட்பா ஆ-கு. வெள்ளைப்பையர். வெ - மணலி பெரியதம்பி முதலியார். கலாநிதி அச்சுக் கூடம், சென்னை. 1861.உ - கதிர்காமநாதர் மீது, ஆசிரிய விருத்தம், ஊஞ்சல், லாலி, ஏலப் பாட்டு, கட்டியம், கும்மி, எச்சரிக்கை, பராக்கு, ப்தம், மங்களம் ஆகியவை. - - சிவ புராணாதி தோத்திர மஞ்சரி தொகுப்பு: சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமி களின் மாணாக்கர் ச.வ. திருவேங்கட நாயுடு. வெளியீடு: சென்னை முத்தியால் புேட்டை பூர்வகலாப் பிரச்ங்க நிகேதன சபை யார். அச்சு : சென்னை கலாரத்ந அச்சுக்கூடம். காலம்: விளம்பி-மாசி.1898. ஒரு தோற்றம் 167 நூல்களிலிருந்து பாடல் கள் தொகுக்கப்பெற்றுள்ளன. மொத்தப்பாடல்கள் 1521. சிவ புராணம் முதலிய பல புராணங்களில் உள்ள கடவுள் வணக்கப் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. விநாயகர் முதல் சிவ சரணர் வரை பல கடவுள் பெயர்களும் அடியார் பெயர்களும் தலைப்பாயுள்ளன. அச்சில் இல்லாத சில புராணப் பாடல்களையும், தம் ஆசான் ஈம. இராமலிங்க சுவாமிகள் தந்த சில பாடல்களையும் தாம் திரட்டிய சிலபாடல்களையும் இந்தத் தொகுப்பில் சேர்த்துள்ளதாகத் தொகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார். இவர் இன்றியமையாக் குறிப்புகள் சிலவும் எழுதியுள்ளார். - தமிழக அரசு ஒலைச்சுவடி நூலகத்தில், R.5748-1,5749:11, 5750-ா என்னும் எண்கள் கொண்ட 3 பகுதிகள்-3 சுவடிகள் இந்நூல் பெயரில் உள்ளன. - - • *