பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 தமிழ் நூல் தொகுப்புக் கலை நடுவில் ஒரு சிறு கோடு இடவேண்டும். இலத்தீனில் 't' என்ப தற்கு நேராகக் கிரீக்கில் \' என்பதாகும்; அதாவது, y என் னும் எழுத்தைத் தலைகீழாகப் போடவேண்டும். பின்பு, இலத்தீனில் g (ழி) என்பதற்குக் கிரீக்கில் Y என்பது நேராகும். இறுதியாக, இலத்தீனில் உள்ள c என்பதற்கு நேரான கிரீக் எழுத்து x என்பதாகும். இந்த அடிப்படையில் வைத்து, முன்னர் தந்துள்ள இரண்டு கிரீக் சொல்லையும் படிப்போமாயின், முதல் சொல்லை "ஆந்தொலொழியா' என்றும், இரண்டாவது சொல்லை "ஆந்தொலொழிகா என்றும் எளிமையாகப் படிக்கலாம். எனவே, இந்த அமைப்பைக் கொண்டு, மேற்காட்டியுள்ள இரு சொற்களுமே, முதன்மை மொழியாகிய கிரீக்கிலிருந்தே பிந்திய மொழியாகிய இலத்தீ னில் கடன் வாங்கப்பட்டு வந்துள்ளன என உணரலாம், ஈண்டு, கிரீக், இலத்தீன் ஆகிய இருமொழி எழுத்துக் களையும் சொற்களையும் பற்றி இவ்வளவு எழுத நேர்ந்ததன் இன்றியமையாத காரணமாவது :- பாடல் தொகுப்புக் கலையைக் குறிக்கும் சொற்களாக ஆங்கிலத்திலும் பிரெஞ்சி லும் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்ற Anthology, Anthologie என்னும் சொற்கள் கிரீக் மொழியிலிருந்து வந்தவைஅதாவது-கிரீக்கிலிருந்து இலத்தீனுக்கும், இலத்தீனிலிருந்து பிரெஞ்சு ஆங்கிலம் முதலிய மொழிகளுக்கும் வந்தவை' என்னும் கருத்தை அறிவிக்கும் நோக்கமேயாம். இந்தக் கருத்தை அறிவிக்கும் நோக்கத்தின் காரணமாவது, "கிரீக் கிலுள்ள ஆந்தொலொழியா’ என்னும் பொருளுக்கு நேரானஒத்த பொருளுடைய தமிழ்ச் சொல்லை எடுத்து ஈண்டு ஒப் பிட்டுக் காட்டவேண்டும் என்னும் நோக்கமேயாம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஆந்தொலொழியா’ என்னும் கிரீக் சொல்லின் பொருளை விளக்கவேண்டும். அது வருமாறு: "ஆந்தொலொழியா என்றால் மலர்த்திரட்டு, மலர்ச் சேர்க்கை மலர்த் தொகுப்பு என்று பொருளாம். இந்தச் சொல்லை "ஆந்தோ லொழியா' என்று இரு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். இவற்றுள் முதல் பகுதியில் 'மலர்' என்னும் பொரு ளும், பிற்பகுதியில் சேர்க்கை என்னும் பொருளும் அடங்கி யுள்ளன. இதற்கு ஆங்கிலத்தில் Flower gathering என்றும்,