பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/510

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


488 தமிழ் நூல் தொகுப்புக் கலை மற்றும் ஒரு சுவடி சிவ புராணாதி தோத்திர மஞ்சரி என்னும் பெயரில் ஒலைச் சுவடி நூலகத்தில் (G.O.M.L.) மற்றுமொரு சுவடி உள்ளது. தி.சந்திர சேகரர் சென்னையில் 1961 ஆம் ஆண்டு வெளியிட்டார். - - இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 1253. இந்தச் `ಈal4, சென்னை. பவாநந்தர் கழகத்திலிருந்து கிடைத்ததாக தி.சந்திர சேகர் கூறியுள்ளார். இந்நூலுக்கு வித்துவான் ப.குஞ்சிதபாதம் உரை எழுதி யுள்ளார். இந்நூலைத் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித் தவர் பெயரும் தெரியவில்லை எனக்கூறியுள்ளார். அங்ங்ன மெனில், க.வ. திருவேங்கட நாயுடு தொகுத்த சிவ புராணாதி தோத்திர மஞ்சரியும் இந்நூலும் வெவ்வேறானவையா? ஒருவேளை, அவர் தொகுத்த பதிப்பை இவர் அறியாரா? குழப்பமாயுள்ளது. முன்னுரையில், 'நல்லிசை ஞானசம்பந்தனும் காவினுக் கரிசும் பாடிய நற்றமிழ்மால்ை சொல்லியவே சொல்லி ஏத்து' - என்னும் சுந்தரர் தேவாரப்பா உள்ளது. இத்தொகுப்பில், விந்ாயகக் கடவுள் வணக்கம் முதல் சுந்தர மூர்த்தி ஈறாக 31 தலைப்புகளில் பல்வேறு புராணங்களிலிருந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்ட தாகக் கூறப்படும் கல்லாடம் என்னும் நூல் முதல், 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திரு மயிலைத் தல புராணம் ஈறாக உள்ள பல நூல்களிலிருந்து பாடல்கள் திரட்டப்பட்டுள்ளன. சைவ மஞ்சரி - தொகுப்பு: பொ. பாண்டித்துரைத்தேவர். குறிப்புரை யும் உண்டு. மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு. மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை பதிப்பு. பாண்டித்துரைத்தேவர் தம் முகவுரையில் 25 - 4-1904 என்னும் நாள் குறித்துள்ளார். உ.வே.சாமிநாத ஐயர் முதலியோர் மதிப்புரை தந்துள்ளனர்.