பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/512

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


490 - தமிழ் நூல் தொகுப்புக் கலை இரத்தினம். விற்பனை உரிமை - பாரி நிலையம், சென்னை. ராஜன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை - 1. பதிப்பாண்டு 1966. உள்ளுறை: (1) நாற்பது நாள் பிரார்த்தனை (இது காலை மாலை இரு வேளைக்கும் உள்ளது. 31 நாட்களில் திருப்தி யில்லாவிடில் மேலும் செய்ய 40 நாட்கள் தரப்பட்டனவாம்). (2) விசேட சந்தர்ப்பங்கட்கு உரியுசெபல்கள். (3) பல்வேறு தொழில் துறையினர்க்கு உரியசெயல்கள் (4) கிறிஸ்து மொழிக் குறள்- இவற்றின் தொகுப்பு. மாலைப் பாக்கள் ஆசிரியர்: புலவர் யம்.பி. மாஸ்கரேனஸ், தூத்துக்குடி. கஸ்தூரி பதிப்பகம், உறையூர், திருச்சிராப்பள்ளி. உள்ளுறை: 'அஞ்சலி என்னும் தலைப்பு முதல் பாதமலர்' என்னும் தலைப்பு ஈறாக 33 தலைப்புகள் உள்ளன. பல காலத்தில் புரடிய பல் வகைப் பாடல்களின் தொகுப்பு இது. தோத்திரப் பாமாலை முன்பக்கங்கள் இல்லை. கொழும்பு நகர் - சைவ பரிபாலன சபையமைத்தவ ராகிய செல்லயவேள் என்னும் செல்லயா பிள்ளை இதன் ஆசிரியர் என்பது, ரீவைகுண்டம் சுந்தர மூர்த்திப் பிள்ளை நூலுக்கு முன் பாடியமைத்துள்ள சிறப்புக் கவிகளால் தெரிகிறது. மூனிச்சுரம் - சிவன் மீது பாடிய சிறு நூல் தொகுப்பு இது. சப்த விடங்கத் தலங்களும் திருமுறைப் பாடல்களும் தொ-கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார். அன் பளிப்பு - கே. குப்புசாமி முதலியார், புதுச்சேரி. பாரி அச்சகம், சென்னை. 1968. -- உள்ளுறை: 'டங்கம் என்றால் உளி. விடங்கம்' என்றால் உளிபடாதது. சப்தம்=ஏழு. சிவன் கோயில்கட்குள் குறிப் பிட்ட ஏழு ஊர்க் கோயில்களில் உள்ள சிவ்லிங்கம் உளியால் செதுக்கிச் செய்யப்படாமல் தாமே அமைந்தனவாம். இவற்றைச் சுயம்புலிங்கங்கள் என்று சொல்வதும் உண்டு. இந்த