பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/519

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 497 நீதி நூல் (உரையுடன்) ஆ-(மாயூரம்) வேத நாய்கம்பிள்ளை. விக்டர் ೨rು. சென்னை. 1892, தெய்வம் உண்டெனல் முதலாக விலங் கினத்திற்கு இடர் செய்யாமை ஈறாக 44 அதிகாரங்களில் 600 பாடல்கள் உள்ளன. சிறந்த நீதி கூறுபவை: நீதி நூல் மற்றுமொரு பதிப்பு: மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை இயற்றிய நீதித் திரட்டு நூல். ப.இராமநாதம்பிள்ளை யின் உரையுடன் உள்ளது. வெளியீடு - சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை. முதல் பதிப்பு 1950. உள்ளுறை: தெய்வம் உண்டெனல் என்ப்து முதலாகப் "பன்னெறி ஈறாக 45 அதிகாரங்களில் பாடல்கள் உள்ளன. நீதி நூல் திரட்டு வெளியீடு - பெ. கிருஷ்ணசாமி நாவலர். . அச்சு - பரப் பிரம்ம முத்திர சாலை, சென்னை. 1879, உள்ளுறை: ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நீதி வெண்பா, நீதி நெறி விளக்கம் - ஆக ஏழு நூல்கள். நீதி மஞ்சரி - முதல் பாகம் வி.கே.எஸ்.பிரஸ், சென்னை. 1877. உள்ளுறை: உலக நீதி, ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை (வெற்றி வேற்கை), முது மொழிக் காஞ்சி, மூதுரை, நல்வழி, நீதி வெண்பா. நீதி மஞ்சரி- இரண்டாம் பாகம் உரை - சிந்தாதிரிப் பேட்டை பு.தெய்வ சிகாமணி முதலி யார். இரண்டாம் பதிப்பு. மிமோரியல் அச்சுக் கூடம், சென்னை. 1877, உள்ளுறை: இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நன்னெறி, நீதி நெறி விளக்கம், அறநெறிச் சாரம், பழமொழி, திரிகடுகம், நான்மணிக் கடிகை, சிறு பஞ்ச மூலம், தாயுமானார் பாடல், நள் வெண்பா-இந்த நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த 220 பாடல்களின் தொகுப்பு இது.