பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/522

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


500 தமிழ்நூல் தொகுப்புக் கலை திரட்டு. (952) - முதலிய பல பெயர்களில், பலரால் தனித்தனி யாகப் பல பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. திருவருட்பாத் திரட்டு திருவருட்பாத் திரட்டு என்னும் பெயரில், பி.வேதகிரிப் பிள்ளை, பி.சுப்பிரமணியப் பிள்ளை ஆகியோாால் பல பாடல்கள் தொகுத்து 1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. பூர் நிகேதன் அச்சுக் கூடம், சென்னை. கீர்த்தனைப் பகுதி திருவருட்பா கீர்த்தனைப் பகுதி, சென்னை ஆ.பால கிருஷ்ணப் பிள்ளை எழுதிய குறிப்புடன், சென்னை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தாரால் கலியுகாதி டுoங்டு-பூர்முக - க்ார்த்திகை-26 ஆம் நாள் (1-12-1933) இரண்டர்ம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பின் காலம்: 1-2-1931 ஆகும். திருவருட்பாத் திருமுறை ஆறு திருமுறைகளுடன், இது காறும் அச்சிடப்படாத பற். பல பதிகங்களும், நித்திய விதி என்னும் உலகியலும், நாமாவளி களும், இத்தொகுப்பில் உள்ளன. வெளியீடு: பிருங்கி மாநகரம் பி.வே.நமச்சிவாய முதலியார். நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, சூளை, சென்னை. 1908. கலியாப்தம்: டுசஞக - பில வங்க ஆண்டு. திருவருட்யா (மூலமும் உரையும்) உரையாசிரியர்: அரன் வாயல் வேங்கட சுப்புப் பிள்ளை. வெளியீடு: சமரச சுத்த சன்மார்க்க சங்கம்,சென்னை. ஆங்கிரச ஆண்டு - வைகாசி-முதல்நாள். 1932. உள்ளுறை: சீவ காருண்ய ஒழுக்கம், திருவடிப் புகழ்ச்சி, விண்ணப்பக் கலி வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், சிவ நேச வெண்பா, மகாதேவமாலை - ஆகியன. திருவருட்பா - ஐந்து திருமுறைகள் ஐந்து திரு முறைகள் - சென்னை சமரச சுத்த சன் மார்க்க சங்க வெளியீடு, உமாபதி அச்சுநிலையம், சென்னை.