பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 தமிழ் நூல் தொகுப்புக் கலை வெளியீட்டுக் குழு - புரவலர்: நா. மகாலிங்கம்; தலைவர்: ஊரன் அடிகள்; உறுப்பினர்கள் சிலர். ஊரன் அடிகள் மிகவும் நீண்ட ஆய்வு முன்னுரை எழுதியுள்ளார். நா. மகாலிங்கம் அணிந்துரைஅளித்துள்ளார்.இது ஆறு திருமுறைகளாகப்பகுத்து வெளியிடப் பெற்றுள்ளது. முறையே ஆறும் வருமாறு: முதல் திருமுறை: தெய்வ மணி மாலை முதல் தனித்திருத் தொண்டர் வரை 52 தலைப்புகள் கொண்டது. இரண்டாம் திருமுறை: கருணை விண்ணப்பம் முதல் இரேணுகை தோத்திரம் வரை 103 தலைப்புகள். மூன்றாம் திருமுறை: திருவடிப் புகழ்ச்சி முதல் மங்களம் வரை 27 தலைப்புகள். நான்காம் திருமுறை: குஞ்சிதயாதப் பதிகம் முதல் அருள் நிலை விளக்கம் ஈறாக 41 தலைப்புகள். ஐந்தாம் திருமுறை: அன்பு மாலை முதல் ஆளுடைய அடிகள் அருள் மாலை இறுதியாக 12 தலைப்புகள். ஆறாம் திருமுறை: பரசிவ வணக்கம் முதல் சத்திய அறிவிப்பு ஈறாக 144 தலைப்புகள். - மேலுள்ளனவே யன்றி,இறுதியில் சன்மார்க்க விண்ணப்பங் கள், பலவகைத் தனிப் பாடல்கள் என்னும் இரண்டு தலைப்பு க்ளில் பல பாடல்கள் தரப்பட்டுள்ளன. இது மிகவும் பயனுள்ள பதிப்பாகும். திருவருட்பாப் பதிப்புகள் மேலும் பல உள்ளன. அவற்றுள் சில வருமாறு: திருவருட்பா-முதல் புத்தகம்-இரத்தின முதலியாரின் வேண்டுகோளின்படி தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப் பித்தது. அட்சய-மகாரவி. பிப்ரவரி 1867. ஏஷியாடிக் பிரஸ், சென்னை. திருவருட்பா-இரண்டாம் புத்தகம் - மயிலை சி. சோம சுந்தரஞ் செட்டியாரின் வேண்டுகோளின்படி தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பித்தது. மிமோரியல் பிரஸ், சென்னை-மார்ச்சு 1880. -