பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/525

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 503 திருவருட்பா - ஆறாம் திருமுறை - வேலூர் பத்மநாப முதலியார்-பெங்களுர் இராகவலு நாயகர் ஆகியோரின் வேண்டு கோளின்படி, தி.க.சுப்பு ராயச் செட்டியார் பார்வை யிட்டபின், திரிசிரபுரம் ம. லோகநாதச் செட்டியார் வெளியிட் டார். மார்ச்சு 1885. - திருவருட்பா-இரண்டாம் பதிப்பு-மயிலை சிக்கிட்டி சோம சுந்தரஞ் செட்டியாரின் வேண்டுகோளின்படி, தொழுவூர் வேலாயுத் முதலியார் பதிப்பித்தது. மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை. 1887. திருவருட்பா - குடும்ப கோஷம்-ஆ. சபாபதி சிவாசாரிய சுவாமிகள் பதிப்பித்தார். மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை. முதல் பதிப்பு 1000. விகுர்தி - தை. 1891. குடும்ப கோஷம் என்பது வள்ளலார் அருளிய ஒரு பகுதி. திருவருட்பா திருமுறைத் திரட்டு-விருப்பம்: கா. திருவேங் கட முதலியார். திரட்டு: பொ. சுந்தரம்பிள்ளை. பார்வை: பூவை கலியாண சுந்தர முதலியார் பதிப்பு. இராமசாமி முதலியார். நந்தன. 1892. திருவருட்பா - பதிப்பு: பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியார். இந்து யூனியன் அச்சியந்திர சாலை, சென்னை. துர்முகி 1896. திருவருட்பா - பார்வை: ச.மு. கந்தசாமி பிள்ளை, புதுக் கோட்டை - இராமச்சந்திரபுரம், வெளியீடு: தி.நா. முத்தையச் செட்டியார். சன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை. ருத்ரோத் காரி - 1924. இன்னும் பல. அருட்பா வெளியீடுகள் பல இருப்பதும், சில வெளியீடுகள் பல பதிப்புகள் பெற்றிருப்பதும், அருட் பாவிற்கு நாட்டில் உள்ள செல்வாக்கை அறிவிக்கிறது. வள்ளலார் சங்கம் அமைத்துத் தம் கொள்கையைப் பரப்ப ஊர் ஊராகச் செல்லவில்லை. தாம் செல்லாவிடினும் பிறரை ஏவி அவ்வாறு செய்யவும் தூண்டவில்லை. தமிழக ஊர்களில் வள்ளலாரின் பெயரால் இருக்கும் அமைப்புகள், வள்ளலாரிடம்