பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/526

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


504 தமிழ் நூல் தொகுப்புக் கலை. உள்ள ஈடுபாட்டால் மக்களே அமைத்துக் கொண்டனவாம். இஃதும் வள்ளலாரின் அருட்பாப் பெருமைக்குத் தக்க சான்றாகும். தமிழகத்தில், ஆழ்வார்கள்-நாயன்மார்கள் முதலியோரின் பெயரால் இவ்வளவு அமைப்புகள் ஏற்படாததற்குக் காரணம், அவர்கள் ஆண்டவனோடு தொடர்பு கொள்வதிலேயே பெரும்பாலான காலத்தைச் செலவழித்து விட்டனர். ஆனால், வள்ளலாரோ, இறைவனிடமிருந்து இறங்கிக் கீழே வந்து மக்களோடு தொடர்பு கொண்டதில் பெரும் பகுதியான காலத்தைச் செலவிட்டார். மக்கட்கு வேண்டிய நலன்களைக் காணுவதிலேயே மிக்க ஆர்வம் காட்டினார் . அதனால், பல அமைப்புகளின் பேரால் வள்ளலார் நின்று நிலைத்துப் போற்றப் பெறுகிறார். அவர்தம் பெருமைக்கு அருட்பா அரும் பெருஞ் சான்றாகும். கொத்துகள்-திரட்டுகள் அந்தாதிக் கொத்துகள் அந்தம்+ஆதி=அந்தாதி. ஒரு செய்யுளின் இறுதிச் சொற் றொடரோ - இறுதிச் சொல்லோ - இறுதி எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலில் வருமாறு பாடல்களை அமைத்துப் பாடப் படும் நூல் அந்தாதி எனப்படும். அந்தம்= இறுதி; ஆதி= முதல் இவ்வாறு தமிழில் எண்ணற்ற அந்தாதி நூல்கள் உள்ளன. அவற்றுள் சிற்சிலவற்றைச் சிலர் தொகுத்து அந்தாதிக் கொத்து என்னும் பெயரில் அமைத்துள்ளனர். அவற்றுள் சில கொத்துக்ளைக் காணலாம்: அந்தாதிக் கொத்து (கழகம்) முதல் பாகம்-சென்னை - சைவ சித்தாந்த நூற்புதிப்புக் கழக வெளியீடு. நவம்பர் 1928, 12 அந்தாதிகள் இந்தக் கொத்தில் உள்ளன. அவையாவன: அதி வீரராம பாண்டியர் இயற்றிய 1. திருக்கருவைக் கலித்துறை அந்தாதி