பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/530

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


508 தமிழ்நூல் தொகுப்புக் கலை 7. 1-89-10. இந்த நான்கு நூல்கள் - மு.வ.கா. R2 (A) (B) (C) (D) கையெழுத்துப் பிரதிகள். இவை. பையனுர் வரத ராசப் பிள்ளையின் காகிதப் பிரதியி லிருந்து 1910-11-இல் எழுதியது. 11. டி.கா. 1797-ஒலை. கோவைக் கொத்துகள் கோவை என்பது அகப்பொருள் துறைகள் பற்றிய நானூறு பாடல்கள் கொண்ட ஒருவகை இலக்கியமாகும். தமிழில் L! Gl) கோவை நூல்கள் உள்ளன. சில கோவை நூல்களிலிருந்து சிற்சில துறைப் பாடல்களை எடுத்துக் கோவைக் கொத்து என்னும் பெயரில் சில கொத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் நூலகத்தில் சில கோவைக் கொத்துகள் உள்ளன. அவற்றைக் காண்பாம். எண். 914. கோவைக் கொத்து (மூலம்) தஞ்சை வாணன் கோவை, அம்பிகாபதி கோலை முதலிய கோவை நூல்கள் சிலவற்றிலிருந்து ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பாடலாக எடுத்து அமைக்கப்பட்டுள்ளது. எல்லாத் துறைகட்கும்-எல்லாக் கோவைகளிலிருந்தும் பாடல்கள் எடுக் கப்படவில்லை. சில துறைகட்குச் சிற்சில கோவைகளிலிருந்து மட்டில் எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளன. மற்றை விவரங்கள் யாவும் அறியக்கூடவில்லை. இந்தப் படியில் (பிரதியில்), தலை வன் போக்கு உடன்படுதல்' என்ற துறை வரையில் பாடல்கள் உள்ளன. - எண். 915 கோவைக் கொத்து ஏறக்குறைய முன் படி போன்றதே இது. இதில், நற்றாய் கேட்டவன் உளங்கொள வேலனை வினாதல்’ என்ற துறை வரை யுள்ள்ன. எண். 916 - கோவைக் கொத்து தஞ்சை வாணன் கோவை, திருவாரூர்க் கோவை, அம்பி காபதி கோவை, குமார குலோத்துங்கன் கோவை முதலிய கோவை நூல்களிலிருந்து திரட்டிய 770 செய்யுட்கள் இந்தத்