பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/532

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


510 தமிழ்நூல் தொகுப்புக் கலை தமிழ்ச் சங்கத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஓலைச் சுவடியி விருந்து பிரதிசெய்தது. - 2. திரு மயிலாசலக் கலம்பகம் - 2812 எண் கொண்ட பனையோலை. 1951 - 52 ஆம் ஆண்டளவில், குமாரக் குப்பம் R, சண்முகத்தால் நன்கொடையாக அளிக்கப் பெற்றது. 3. ஞான விநோதக் கலம்பகம் ... .. பிள்ளைத் தமிழ்க் கொத்துகள் கடவுள் மீதோ, பெரியார்கள் மீதோ, அவர்களைச் சிறு பிள்ளையாகக் கற்பனை செய்து, பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல் கள் பாடியது பிள்ளைத் தமிழ் நூலாகும். சில பிள்ளைத் தமிழ் நூல்களின் தொகுப்பு (கொத்து) நூல் இது. அரசுச் சுவடி நூல் நிலையத்தில் உள்ளது. M.G.O.M.S 50. குறிப்புரை உண்டு. வெளியிட்டவர் தி. சந்திர சேகரன். 12 - 2 - 1956 - சென்னை. பிள்ளைத் தமிழ்நூல்கள் 1. அரும் பாத்தை வேத விநாயகர் பிள்ளைத்தமிழ்- ஆசிரியர் - பெயர் இல்லை. - - 2. வைகுந்த நாதன் பிள்ளைத்தமிழ் - ஆசிரியர் பெயர் இல்லை. - 3. இராவகர் பிள்ளைத்தமிழ் - ஆசிரியர் -குற்றாலம் குழந்தை முதலியார். 4. தில்லைச் சிவகாமிய்ம்மை பிள்ளைத்தமிழ்-ஆசிரியர் இல்லை. 5. புதுவைத் திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ் ஆசிரியர் - முத்துக்குமரர். 6. தூத்துக்குடி பாகம் பிரியா அம்மை பிள்ளைத் தமிழ் - ஆசிரியர் பெயர் இல்லை. - 7. சிவானந்தன் பிள்ளைத் தமிழ் - ஆசிரியர் பெயர் இல்லை. இந்தக் கொத்தால், ஏழு பிள்ளைத் தமிழ் நூல்களின் அறிமுகம் கிடைக்கிறது. ஒலைச் சுவடி விவரம் 1. மூவரு.கா. 2677 - K.சண்முகம் பிள்ளை நன்கொடை.