பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/534

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


512 தமிழ்நூல் தொகுப்புக் கலை தீபிகை, 12. சித்தாந்தக் கட்டளை, 13 சித்தாந்தத் தத்துவக் கட்டளை, 14. வேதாந்த தச காரியக் கட்டளை-என்பன. இந்த 14 நூல்களும் வரிசை மாறிக் கட்டளைக் கொத்து’ என்னும் பெயரிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பை அடுத்தாற்போல் காணலாம். - கட்டளைக் கொத்து கட்டளை என்னும் வகையைச் சேர்ந்த நூல்களின் கொத்து (தொகுப்பு) இது. பதிப்பு: டி.எஸ்.துரைசாமி முதலியார், 20, பாளையப்பன் தெரு, சென்னை, 1920. பொருளடக்கம் வருக : சிவப்பிரகாசக் கட்டளை, திருவாலவாய்க் கட்டளை, பதினாறு பேறு (திரு நந்திதேவர் சிவன் சந்நிதியில் விண்ணப் பித்ததாம்), வேதாந்த தத்துவக் கட்டளை, ஆராதார ஜீவோற். பத்தி சிந்தாமணி (திருநந்தி தேவர் திரு மூல தேவருக்கு உப தேசித்தது), தத்துவ தீபிகை, ஞானக் கட்டளை, தத்துவாமிர் தக் கட்டளை, நாநா சிவவாதக் கட்டளை, உபதேச உண்மைக் கட்டளை (ஆசிரியர்-சிதம்பர சுவாமிகள்), வேதாந்த தசா வத்தைக் கட்டளை, வேதாந்த தச காரியக் கட்டளை, சித் தாந்தக் கட்டளை,சிந்தாந்த தத்துவ லட்சணம் - ஆகியவை. வேத சமயம், சைவ சித்தாந்த சரித்திரம் முதலியன பற்றி யன இந்நூல்கள். - கட்டளைத் திரட்டு இது 32 கட்டளை நூல்களின் தொகுப்பு. வெளியீடு - அ. முத்து வடிவேல் முதலியார். பூமகள் அச்சுக் கூடம் சென்னை, 1931. சிவப்பிரகாசக் கட்டளை முதல், தத்துவ விசேஷார்த்த சங்கிரகம் முடிய மொத்தம் 32 நூல்கள் இத் தொகுப்பில் உள்ளன. - பாட்டியல் கொத்து இந்தக் கொத்தில், வச்சணந்திமாலை, சிதம்பரப் பாட்டி யலின் பொருத்தவியல்-மரபியல், நவநீதப் பாட்டியல், சம்பந்தப் பாட்டியல் என்னும் பாட்டியல் நூல்கள் அடக்கப்பெற்றுள்ளன.