பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/535

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 513 உரையுண்டு. ஆய்வு-ஆரணி சென்னை கேசுவுலு நாயடு, சச்சி தானந்த அச்சியந்திர சாலை, சென்னை. 1908. தூது நூல்கள் சிற்றிலக்கியங்களில் 'தூது’ என்னும் ஒரு வகை நூல் உண்டு. ஒருவர் இன்னொருவர்பால் ஏதாவது ஒன்றைத் தூது அனுப்பிய தாகப் பாடுவது தூது நூலாகும். சில தூது நூல்களைப் பார்க் கலாம் : தூதுத் திரட்டு தமிழக அரசு ஒலைச் சுவடி நூல் நிலையம். M.G.O.M.S., N. 58. முகவுரை - தி. சந்திரசேகரன். ஆங்கில முகவுரை 22-6-1957. தமிழ் முகவுரை 17-8.1957 நூல்கள் ஆசிரியர் பெயருடன் வருமாறு: - 1. பெரிய தம்பி பிள்ளை பேரில் மான் விடுதூது (பெரிய பூபதி என்பவர், வேம்பனூர் சசிவர்ண பூபதி மகன்-கூடல் நகரை யாண்ட வள்ளல்). நூலாசிரியர்- மங்கை பாகக் கவிராயர் (19. -ஆம் நூற்றாண்டு) 2. முத்து வீரப்பப் பிள்ளை பேரில் மான் விடுதூது- (ஆசிரியர் மங்கை பாகக் கவிராயரா யிருக்கலாம்.) - 3. வெள்ளைய ராசேந்திரன் துகில் விடுதூது- (ஆசிரியர் : மங்கை பாகக் கவிராயரா யிருக்கலாம்) 4. செங்குந்தர் துகில் விடுதூது-ஆசிரியர் : சேலம்-வெண்ணத் தூர் பரமானந்த நாவலர் 5. சங்கரமூர்த்தி பேரில் விறலி விடுதூது-ஆசிரியர்-திருவிடை மருதூர் சுப்பையர். 6. மணவை-திருவேங்கட முடையான் மேக விடு தூதுஆசிரியர் பெயர் குறிப்பிடப்பட வில்லை. இந்தநூல் தொடர்பாக, அரசு ஒலைச் சுவடி நூல்நிலையத்தியத்திலுள்ள விபரம் வருமாறு:-