பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 515 2. மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது-பெயரில்லை. 3. கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது-கவிராசர் கச்சியப்ப முனிவர். - சதகத் திரட்டுகள். சதகம் என்பது நீதி - நேர்மைபற்றி அறிவுரை கூறும் நூறு பாடல்கள் கொண்ட நூலாகும்-பல சதக நூல்களைத் திரட்டி ஒரு நூலாகச் சிலர் பதிப்பித்துள்ளனர். சில வருமாறு: ஏழு சதகத் திரட்டு முதல் பாகம்-மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, இரண்டாம் பதிப்பு. 1916-இத் தொகுப்பில் ஏழு சதகங்கள், அடங்கியுள்ளன. அவை : அறப்பளிச்சுர சதகம், குமரேச சதகம், திருவேங்கட சதகம், தண்டலையார் சதகம், கோயில் சதகம், எம்பிரான் சதகம், சிவ சங்கர சதகம் - என்பன. பத்துச் சதகத் திரட்டு மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை. முதல் பதிப்பு 1914இதில் உள்ள, பத்துச் சதகங்கள் வருமாறு:- - கைலாசநாதர் சதகம், செயங் கொண்டார் சதகம், குரு நாத சதகம், அவையாம்பிகை சதகம், அருணாசல சதகம், அண்ணாமலை சதகம், வட வேங்கட நாராயண சதகம், தொண்டை மண்டலச் சதகம், கோகுல சதகம், திருத் தொண் டர் சதகம்-என்பன. இது இரண்டாம் பாகம். பன்னிரு சதகத் திரட்டு வெளியீடு- பி.இரத்தினநாயகர் சன்ஸ், சென்னை. திருமகள் விலாச அச்சு நிலையம், சென்னை. முதல் பதிப்பு 1940. இரண் டாம் பதிப்பு 1948. ஆசிரியர்கள் பெயர்களுடன் சதகங்கள் வரு மாறு: 1. குமரேச சதகம்-திருப்புல் வயல் குருபாத தாசர் 2. அறப்பளிச்சுர சதகம்-அம்பலக் கவிவாணர்