பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 517 தொண்டை மண்டல சதகம் 'வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' இது ஒளவையாரின் தனிப்பாடல், சான்றோர் உடைத்து என்று சிறப்பிக்கப் பெற்ற தொண்டை நாட்டைச் சேர்ந்த புலவர்கள், வள்ளல்கள் முதலானோர் தொடர்பான பாடல் களின் தொகுப்பு இது. நூலாசிரியர் : படிக்காசுப் புலவர். சான்றோர்கள் பெயர்கள் வருமாறு: திருவள்ளுவர்,கச்சியப்ப சிவாசாரியார், கம்பர்,பரிமேலழகர், ஒட்டக் கூத்தர், இராமாநுசர், சேக்கிழார், இரட்டையர், அருணகிரிநாதர், பவணந்தி, அப்பைய தீட்சதர் முதலிய புலவர்கள். மற்றும், அதிகமான், கறுப்பன், சடையப்பன், மாரி கண்டன், பல பிரபுக்கள், பல அரசர்கள் முதலானோர். தொண்டை மண்டல சதகம் ஆதொண்டன் ஆண்ட தொண்டை மண்டலப் பகுதி பற்றி யது. வள்ளலார் தொண்ட மண்டல சதகம் என்றும் சொல்லப் படும். மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை - 1913, கொங்கு மண்டல சதகம் ஆசிரியர் : கார்மேகக் கவிஞர்; சமணர்; இயற்பெயர் சினேந்திரர்; இளமையிலேயே கவி பாடியதால் கார்மேகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். கொங்கு மண்டலத்தில் உள்ள விசயமங்கலம் என்னும் ஊரில் பிறந்த இவர் கொங்கு மண்டல சதகம் எழுதியது பொருத்தமே. படிக்காகப் புலவரை யும் தளவாய் இராமப்பையிரையும் இவர் குறிப்பிட்டிருப்பதால், இவர் 17 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என அறியலாம். இந்நூல் நூறு கட்டளைக் கவித்துறைப் பாடல்கள் கொண்டது. இதில், பண்டைய நிலப்பரப்பு, தெய்விக விளக் கம், சித்தர் - சமயாசாரியர் - முடியுடை வேந்தர் - குறுநில மன்னர் - வள்ளல்கள் - புலவர்கள் முதலியோர் பற்றிய