பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 519 சிதம்பரம், திருவாரூர், திருவரங்கம் முதலிய திருப்பதி களின் சிறப்பு, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், திரு நீல நக்கர், மானக்கஞ்சாறர் முதலிய சிவனடியாரின் பெருமை:திருவாரூர் ஞானப்பிரகாசர், சீர்காழி க்ண்ணுடைய வள்ளலார் , திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர், சடையப்ப வள்ளல், கஞ்சனூர் கரைக்குடையான், சேந்தனார், ஒளவை யார், ஆனைப்பாக்க முடையான், திருக்கண்ணபுரம் முனைய தரையன், காளமேகப் புலவர், தேவூர் வேள், பொய்யா மொழியார், அனதாரி, அம்பற் கிழான், இரட்டையர்கள், வேளுர்க் கிழான், திருவெண்காடர், சத்தி முற்றப் புலவர், ஒட்டக் கூத்தர், புங்கனூர்க் கிழவன், சேக்கிழார், குடிதாங்கி, திருவேங்கடந்ாதர், வைத்தியநாத தேசிகர், புத்துர்வேள், பெருமங்கல முடையான், புத்தமித்திரன் - முதலிய பல துறைப் பெரியோர்களின் சிறப்புப் பெருமை - முதலிய செய்திகள் இந்நூலுள் கூறப்பட்டுள்ளன - அதாவது, சோழநாடு தொடர் பான செய்திகள் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. ஆசிரியர் காலம்:1650 - 1728. பாண்டி மண்டல சதகம் ஆ-ஐயம் பெருமாள். பாண்டிய நாடு தொடர்பான சிறப்புச் செய்திகளின் தொகுப்பாகும் இந்நூல். இந்நூலிலுள்ள செய்திகள் வருக! - சோமசுந்தரர் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல் களுள் சில திருவிளையாடல்கள்- பாண்டியநாட்டுச்சிவனடியார் கள்,புலவர்கள், பெரியோர்கள் ஆகியோரின் சிறப்புகள்-தஞ்சை வாணன் கோவை கொண்ட செய்தி, கருமாணிக்கன் கப்பல் கோவை கொண்ட செய்தி-திருமாலிருஞ்சோலை முதலிய வைணவத் திருப்பதிகளின் சிறப்பு - மதுரை, கழுகுமலை, திருக்குற்றாலம் முதலிய சைவத் திருப்பதிகளின் பெருமைமுதலியன இந்நூலுள் கூறப்பட்டுள்ளன. - - பாண்டிய நாட்டு எல்லை பின்வரும்ாறு அறிவிக்கப்பட் டுள்ளது - தென்குமரிக்கு வடக்கு-வெள்ளாற்றுக்குத் தெற்குதிண்டுக்கல்லுக்கும் காரைக்காட்டுக்கும் கிழக்கு - சேதுவின் மேற்கு - என்னும் செய்தி 98 - ஆம் பாடலில் தரப்பட்டுள்ளது.