பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/542

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


520 தமிழ்நூல் தொகுப்புக் கலை மற்றும் ஒரு செய்தி: பாண்டிய மன்னன் ஒருவன் கேட்டுக் கொண்டதனால், தொண்டை நாட்டு மன்னன் தொண்டை மான், தொண்டை நாட்டிலிருந்து நாற்பத்தெண்ணாயிரம் குடிகளைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி வைத்தானாம். இவர்களே பாண்டிய மண்டலத்திலுள்ள தொண்டை மண்டல வேளாளர்களாம் - இச்செய்தி 9ஆம் பாடலில் அறிவிக்கப்பட் டுள்ளது. உத்தர கோசம் என்னும் பகுதியில் மங்கல வேளாளர் குடி மிகுதி என்னும் செய்தி 12 ஆம் பாடலில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - - இவ்வளவு செய்திகளின் தொகுப்பே பாண்டி மண்டல சதகம் ஆகும். - தமிழ் நாட்டுப் பாடல்கள் நாடோடிப் பாடல்கள் எல்லா மொழிகளிலும் நாட்டுப் பாடல்கள் உண்டு. இவற்றை வட்டாரப்பாடல்கள் என்றும் கூறலாம். ஒவ்வொரு வட்டாரத்திலும் அவ்வவ்விடச் சூழ் நிலைக்கு ஏற்ற பாடல்கள் இருக்கும். ஒரு வட்டாரப் பாடல்கள் இன்னொரு வட்டாரத் தார்க்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழ்ப் பெரு நாட்டுக்குள்ளேயே பல சிறு சிறு நாடுகள் உள. நாடுகள் தோறும் செல்லுவோர் பொதுவாகப் பாடும் பாடல்களை நாடோடிப் பாடல்கள் எனலாம். நாட்டுப் பாடல்களுள் - நாடோடிப் பாடல்களுள் பல எழு தப்படாமல், வாய் வழியாகச் சொல்லச் செவி வழியாகக் கேட்டு வருபவையாகும் - எழுத்தறிவில்லாத - படிப்பறிவு இல் லாத எளிய மக்களும் இவற்றைப் ப்ாடுவது உண்டு. ஆண்கள் பர்டாத - பெண்கள் பாடுகின்ற பாட்டிமார்கள் பாடுகின்ற நாட்டுப்பாடல்கள் பல உண்டு. யான் கெடிலக் கரை நாகரிகம்’ என்னும் நூலில், தென்னார்க்காடு اoralساکنا நாட்டுப் பாட்ல் கள் பலவற்றைத் தந்துள்ளேன். அவற்றுள் பெரும்பாலானவை, என் அன்னை-மனைவி-மாமியார் முதலியோர் வாய்க் கேட் டறிந்தவையாகும். -