பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/543

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 521 விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், தாலாட் டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், கதைப்பாடல்கள், உழவுப் பாடல்கள், ஏற்றப் பாடல்கள், கடவுட் பாடல்கள், நீதிப் பாடல்கள், வாழ்க்கைப் பாடல்கள் முதலிய பாடல்களை இவ்வகைக்குள் அடக்கலாம். எழுத்து அறியாதவர்களுள்ளும் கற்றவர்கள் உளர். எழுத்து கண்டு பிடிக்காத காலத்தில், மக்சள் வாய் வழி - செவிவழியா கவே பாடல்கள் கூறியும் கேட்டும் கல்வி கற்று வந்தனர். இன்றும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் சில பகுதிகளில், எழுத்தறிவு பெறாத மக்கள், எழுத்து கண்டு பிடிக்காத மொழி பேசும் மக்கள், வாய்வழி - செவி வழியாகவே கல்விபெற்று வருகின்ற னராம். எழுத்துகளைப் பார்த்துப் படிக்கும் கல்வி, காதால் கேட்டுத் தெரிந்துகொள்ளும் கேள்விக் கல்வி என்னும் இரண் டனுள், கேள்விக் கல்வியே முந்தியது; எழுத்துக் கல்வி பிந்தியதே. - 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார் - ஞான சம்பந் தரின் தேவாரப் பாடல் பகுதி. கேள்வியும் கல்வியாகும்’ - திவாகர நிகண்டு நூற்பா, திருக்குறளில் கேள்வி என்னும் தலைப்பில் பத்துப் பாடல்கள் உள. கற்றிலனாயினும் கேட்க: என்கிறார் வள்ளுவர். நாட்டுப் ப்ாடல்கட்கும் நாடோடிப் பாடல்கட்கும் கேள்விப் பெருமை உண்டு. கிரேக்க அறிஞர் ஃஒமர் (Homer) என்பவரின் 'இலியத் (Iliad),ஒடிசி (Odyssey) என்னும் காவி யங்கள், பண்டைக்கால நாட்டுப் பாடல்களின் ஒரளவு தொகுப்பு என்று கூறுவதுண்டு. இந்தக் காலத்தில் எழுத்து கண்டு பிடித்து எழுதுவதால், இதுவரையும் ஏட்டில் எழுதாதிருந்த கவிதைகளும் இப்போது ஏட்டில் எழுதப்படுகின்றன - அச்சிடப்படுகின்றன. அங்கனம் உள்ள சில நூல்தொகுப்புகளை இனிக் காண்பாம். - - நாடோடி இலக்கியம் (1944) கட்டுரை விளக்கத்துடன் பாடல்கள் தரப்பெற்றுள்ளன. தொகுப்பு: கி.வா.சகந்நாதன், வெளியீடு; கலைமகள் காரி