பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 தமிழ் நூல் தொகுப்புக்கலை யாலயம், சென்னை, முதல் பதிப்பு: 1944, இரண்டாம் பதிப்பு: 1955. பொருளடக்கம் - முகப்பு:1.இயற்கைப்பாட்டு, 2.பாட்டி கதையும் பாட்டும். ஏற்றப் பாட்டு:3.ஏற்றக்காரன் காதல், 4.கிராம பாணம், 5.சமரசப் பாட்டு, 6.கதம்பம், 7.'எப்போ மழை பெய்யும்', 8.மலர் பறிக்கும் பெண், 9.புத்திர பாக்கியம், மலர் மாலை 10. பொங்கல் பாட்டு, 11.வீரமுள்ள வீராயி, 12.தவளையின் புலம்பல், 13.முள்ளுமுனை, 14:அரிசிக்காரன், 15.மாட்டேன், 16.சிரிப்பு மூட்டும் பாடல்கள். 17.இங்கிலீஷ் கலந்த பாடல்கள், 18.முத்து வீராயி காதல், 19.பரதேசியின் உபதேசம், 20.படகுக்காரன் பாட்டு, 21. சங்கடங்கள், 22. சாலையிலே காதல், 23.குருவியின் கல்யாணம், 24. வாடிய உள்ளம், 25,கோமாளிப் பாட்டு, 26.மலரும் உள்ளமும், 27.அடி பட்ட நாய், 28.கள்ளக் காதல், 29.மாரியம்மன் பாட்டு. இந்தத் தலைப்புகளைப் பார்க்கும்போதே சுவையா யுள்ளது. பாடல்களை இசையுடன் படித்தால் எவ்வளவோ சுவையாயிருக்கு மல்லவா? - மலை யருவி(1959) (நாடோடிப் பாடல்கள்) தெம்மாங்கு முதல் பல கதம்பம் வரை பல தலைப்பு களில் பாடல்கள் உள்ளன.16-4-58என்னும் நாளிட்ட கி.வா. சகந்நாதனின் விரிவான முகவுரை உள்ளது. 117 பக்கம் கொண்ட ஆராய்ச்சி உரையும் உள்ளது. தமிழக அரசின் ஒலைச்சுவடி நூல்நிலைய (M.G.O.S.) வெளியீடு இது. ஆண்டு 1959.இந்நூற் பாடல்கள் ೧,5667ಅ வகையைச் சேர்ந்தவை. சென்னை மாவட்ட ஆட்சியாளராய் (கலெக்டராய்) இருந்த பர்சி மக்iன் என்பவர், வரிக்கு இத்தனை அணா எனத் தந்து மலைப் பக்கத் தோட்டத் தொழிலாளரிடமிருந்து பாடல்களைத் திரட்டினார். சில பாடல்களை ஆங்கிலத்தில் பெயர்த்தார். இயற்கைப் பாடல்கள் கட்டுக்கு அடங்காதவை