பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 தமிழ்நூல் தொகுப்புக் கலை தொடர்ச்சியுமாக இரண்டு தொடர் நாடோடிப் பாடல்கள் உள்ளன. கல்லாத சிற்றுார் மக்கள், மாடுமேய்த்தல் போன்ற தொழில் செய்தபோது துன்பம் மறந்து பாடிய பாடல்களாகத் தோன்று கின்றன. இப்பாடல்களைப் படிக்கப் படிக்க, உள்ளத்தில் எழுச்சியும், ஊக்கமும் இனிமையுணர்வும் உண்டாகும். இப் பாடல்களால் அந்தக்கால மக்களின் நிலையைப் புரிந்து கொள்ளலாம். இந்த நூலின் மாதிரிக்காக முதல் பாட்டு பின் வருமாறு: "தில்லாலே ல்ேலோ தன்னன்ே பேசிமிக்கி தில்லாலே லேலோ t ஆனைமுகக்(ற்)கினிய ஆறுமுகனே ஐயாவுனைச் சரணம் ஆண்டவனே சரண மென்றேன்-தில்லே லேலோ (1) நானு நடந்திருப்பேன் நடப்பாரைப் பார்த்திருப்பேன் சாமி நடையைப் போல செய்கையிலே நான் காணேன் தன்னானே தானே தன்ன (2) காடை கூடு க்க்கத்திலே கருத்த சாமி பக்கத்திலே மாடப்புறாஞ் செடுக்கரையுண்டோ வுன்னிடத்தில் - (தன்னானே)-(3) இவ்வாறாக இன்னும் பல நாடோடிப் பாடல்கள் இருக்க லாம். அவற்றைத் தேடிக்கொணர்ந்து, பல நூல்களாகப் பெயரிட்டுத் தொகுத்து மக்கட்கு வழங்கிச் சுவைத்துப் பயன் புெறச் செய்யவேண்டியது அறிஞர்களின் கட்மையாகும். தனிப் பாடல் திரட்டுகள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு முதலிய கழக இலக்கியங்கள், இரண்டாயிரம் - மூவாயிரம் ஆண்டுகட்கு முன் பலரால் இயற்றப்பெற்ற உதிரித் தனிப் பாடல்களின் திரட்டுகள் ஆகும். வெள்ள நீர் வீணாகாமல் அணைகளில் தேக்கி வைப்பதைப்போல், உதிரிப் பூக்கள் வீணாகாமல் மாலையாகத் தொடுத்துப் பயன்படுத்துவது போல், உதிரித் தனிப் பாடல்கள் சிதைந்து காணாமல் போகாதபடி, கிடைத்த பாக்களையாவது காத்து வைப்போம்