பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 தமிழ் நூல் தொகுப்புக் கலை (2) “Encyclopaedia Americana - Volume 2'. (New York-U.S.A.-1966-Page No: 17)– @ģg Galgifu?Liņsysh sirgi வருமாறு: ANTHOLOGY (Gr. authologia, from anthologos, flower gathering) is the name given originally to a collection of short, unconnected Greek poems from many sources (see Greek Anthology, The) or to its various enlargements......... (3) “The New Funk & Wagnalis Encyclopaediavolume-2' - ANTHOLOGY: (Gr., “Flower gathering”), the title given to a work consisting of series of literary selections. The term is most often used to refer collections of poems...... { - மேலே, இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலுள்ள நூல்களிலிருந்து மொழிக்கு மும்மூன்று நூற்சான்றுகள் பார்த்தோம். இவைபற்றி இங்கே இவ்வளவு விரிவாக எழுத நேர்ந்ததற்குத் தக்க காரணம் உண்டு. கிரீக் இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், முதலில் பூமாலையைக் குறித்த சொற்கள் பின்னர்ப் பாமாலையையும் குறிக்கலாயின என்னும் உண்மையை, மேற்காட்டியுள்ள அகச் சான்றுகள் நமக்கு நன்கு விளக்குகின்றன. இது குறித்து இன் னும் சிறிது ஆராய்வோம். முதலில் இலத்தீன் மொழியிலுள்ள நூல்கள் மூன்றையும் எடுத்துக் கொள்வோம். அவற்றுள் முதல் நூலில் ஆந்தொ லொழியா’ என்பதற்கு, புஷ்பங்களைக் குறித்த சிறு புத்தகம், பூச்சேர்க்கை, நல்ல வாக்கிய முதலியதின் சேர்க்கை, மாலை -ஆகிய பொருள்கள் தரப்பட்டிருப்பதைக் காணலாம். இரண் டாவது நூலில் மணிமாலை, பாமாலை என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளன. மூன்றாவது நூலிலோ, பாமாலை (பாக்களின் தொகுப்பு) என்னும் ஒரே பொருள் மட்டும் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து நாம் அறிவது, முதலில் பூமாலையைக் குறித்த சொல், நாளடைவில் பூமாலை, பாமாலை ஆகிய இரண்டை