பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/552

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


530 தமிழ்நூல் தொகுப்புக் கலை இரண்டாம் பாகம்: மகாவித்துவான் கா. இராமசாமி நாயுடுவே, பிற்காலப் புலவர்கள் பலர் பாடிய 850 பாடல் களைத் தொகுத்து உரை எழுதி வெளியிட்டுள்ளார். வைத்திய ரத்நாகரம் பிரஸ், சென்னை - ஆண்டு 1907. இரண்டாம் பதிப்பு-1913. - தனிப்பாடல் நிரட்டு-1905 மயில்ம் சுப்பிரமணியசுவாமி பார்வை - பொன்னுசாமித் தேவர் ஒப்புதல் - காளமேகம் முதலிய பலர் பாடல்கள் - மொத்தச் செய்யுள் 1291. பத்மநாப விலாச அச்சுக் கூடம், சென்னை. ஆண்டு 1905. - தனிச் செய்யுள் சிந்தாமணி -1(1908) இதில், 182 புலவர்கள் பாடிய 3815 பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. ஆசிரியரின் வரலாற்றுக் குறிப்பு தரப்பெற் றுள்ளது. பழ.சி.சண்முகம் செட்டியாரின் வேண்டுகோளின் படி, மு.ரா. கந்தசாமி கவிராயர் தொகுத்தது இது. ஆண்டு 1908. - தனிச் செய்யுள் சிந்தாமணி-2 H இதில், 154 புலவர்கள் பாடிய 2850. பாடல்கள் உள்ளன கலா ரத்நாகரம் அச்சுக் கூடம், சென்னை. தனிச் செய்யுள் சிந்தாமணி - 3 கொட்டாம்பட்டி கருப்பையா பாவலர், முத்து ராமலிங்கத் தேவர் முதலிய பலர் பாடல்களின் திரட்டு. புஷ்பரதச் செட்டி யார் பிரஸ், சென்னை - 1. தனிச் செய்யுள் சிந்தாமணி-4 மு.ரா. கந்தசாமி கவிராயர், உ.வே. சாமிநாத ஐயர், Дтт. இராகவையங்கார் முதலியோரின் பாடல்களின் தொகுப்பு. விவேக பானு யந்திர சாலை - மதுரை. தனிப் பாடல் திரட்டு (?) காளமேகம் முதலியோர் பாடல்க்ள் - மொத்தச் செய்யுள் 1248, முதல் புத்தகம். முதல் ப்க்கம் இல்லாமையால், பதிப்பா ளர் - அச்சுக்கூடம் - ஆண்டு முத்லியன அறியப்படவில்லை.