பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 தமிழ்நூல் தொகுப்புக் கலை தனிப் பாடல் திரட்டு (1939) தொகுப்பு - கா. சுப்பிரமணியப்பிள்ளை. இரண்டு பகுதிகளாக 1939-இல் வெளியிடப்பட்டது. முதல் பகுதியில் 33 முற் காலப் புலவர்கள் இயற்றிய 850 பாடல்கள் உள்ளன. இரண் டாம் பகுதியில் 51 பிற்காலப் புலவர்கள் இயற்றிய 433 பாடல் கள் இடம்பெற்றுள்ளன. கா. சுப்பிரமணியப் பிள்ளை விரிவாக உரை எழுதியுள்ளார். தனிக் கவித் திரட்டு (1939) வெள்ளக் கால் சுப்பிரமணிய முதலியார் பல நேரங்களில் எழுதிய 343 பாடல்களின் திரட்டு இது. இதற்கு அவரது குறிப்புரையும் உண்டு. இதன் உரிமை, உ.வே. சாமிநாதஐயர். முகவுரை: பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், பதிப் ப்ாசிரியர் கு. அருணாசலக் கவுண்டர், நெல்லை, வெளியீடு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, ஆண்டு 1939, தனிப் UTLನು திரட்டு (1950) இதில், சீர்காழி அருணாசலக் கவிராயர் முதல் கயத்தாற் றரசன் வரையுள்ள 57 புலவர்களின் பாடல்களும், மேலும் பெயர் அறிவிக்கப்படாத புலவர் பலர் ப்ாடிய433 பாடல்களும் ஆக, மொத்தம் 865 பாடல்கள் உள்ளன. கா. சுப்பிரமணியப் பிள்ளையின் உரை உடையது. சென்னை B. இரத்தினநாயகர் சன்ஸ் அச்சுச் கூடம். ஆண்டு 1950. இது இரண்டாம் பாகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப் பாடல் திரட்டு (1953) - ஒளவையார் முதல் எல்லீசு துரை வரையான 35 புலவர் களின் பாடல்களின் தொகுப்பு இது. கா.சுப்பிரமணியப் பிள்ளை உரை எழுதியுள்ளார், மொத்தப் பாடல்கள் 850. B.இரத்தின நாயகர் சன்ஸ் அச்சுக் கூடம், சென்னை. ஆண்டு 1953.