பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/566

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


544 . தமிழ்நூல் தொகுப்புக் கலை ஆசிரியர் - குழந்தைக்கவிராசர். இவர் குன்றக்குடி முருகன் மீது நாடோறும் (தினம்) பாடிய பாக்க்ளின் தொகுப்பு.இது. ஆசிரியர், நாள்காட்டி (டைரி) போல ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் எழுதிய, நாள் (தேதி) கிழமை, நட்சத்திரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார் நூலில் அருணகிரிநாத ரையும் புகழிக் கூத்தரையும் குறிப்பிட்டிருப்பதால் அவர்கட்குப் பிற்காலத்தவர் இவர் என்பது விளங்கும். நடை சந்தப்பா நடை. LITTL நாட்டில் உள்ள ஓர் ஊரிலிருந்து சந்திரசேகர் இதைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்தாராம். ஆசிரியர் வரலாறு என்னும் தலைப்பில், 'தின கவிதைப் புஸ்தகம்-மல்லையூர் அழகிய சிற்றம்பலக் கவிராசன் குமாரன் குழந்தைக் கவி ராசன் குன்றக் குடிக் குமரன் பேரில் பாடின கவிதைப் புஸ்தகம்..” என நூலின் தொடக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. - தின கவிதை-பாகம் 2 - - M.G.O.S.NO.CLVI. General Editor T. Chandra Sekar. Critically Edited. With Introduction And Notes by M. Rajakkannu. தி. சந்திரசேகர் ஆங்கில முன்னுரை: 16-2-56. சென்னை அரசினர் கலைக்கல்லூரி மு. இராசாக்கண்ணு தமிழ் முகவுரை: 9 -7 - 1956. பாடல் மொத்தத் தொகை - 2623 முதல் 5117 வரை. இராசாக்கண்ணு 76 பக்கம் கொண்ட நீளமான முன்னுரை எழுதியிருக்கிறார். 1. - - ஆசிரியர் வரலாறு: "தின கவிதைப் புஸ்தகம் - அழகு . மல்லையூர் அழகிய சிற்றம்பலக் கவிராசர் குமாரன் குழந்தைக் கவிராசன் குன்றக்குடிக் குமரன் பேரில் பாடின கவிதைப் புஸ்தகம்...' என நூலின் தொடக்கத்தில் உள்ளது. இந்தத் தொகுப்பின் இரண்டு பாகங்களிலும் சேர்த்து மொத்தம் 5117 பாடல்கள் உள்ளன. ஆசிரியர் தினம் ஒரு கவிதை வீதம் எழுதியிருப்பார் என்பது 'தினகவிதை' என்னும் பெயரால் தெரியவருகிறது. இது உண்மையாயின், 5117